2025-ம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவிற்கான அந்நிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூர் 50% பங்களித்துள்ளது. இந்த காலாண்டில் இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீடு 43 சதவீதம் அதிகரித்து 13.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இதில் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளது. ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2024 வரை சிங்கப்பூரின் மொத்த அந்நிய நேரடி முதலீடு சுமார் 159.94 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்தியாவிற்கான அந்நிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூர் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த நிதியாண்டில் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இருந்து 11.77 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது. ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2024 வரை சிங்கப்பூரில் இருந்து சுமார் 159.94 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது. இருதரப்பு வர்த்தகத்தில், 2023-24-ம் ஆண்டில்…
Author: Porulaathaaram Post
இன்றைய வர்த்தநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 759.05 புள்ளிகள் உயர்ந்து 79,802.79 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 216.95 புள்ளிகள் உயர்ந்து 24,131.10 புள்ளிகளாக நிலைபெற்றது. முன்னதாக, சென்செக்ஸ் நேற்று 1,190.34 புள்ளிகள் சரிந்து 79,043.74 புள்ளிகளிலும், நிஃப்டி 360.75 புள்ளிகள் சரிந்து 23,914.15 புள்ளிகளிலும் முடிவடைந்தது. இரு குறியீடுகளும் ஒரு சதவீதம் உயர்வு கண்டுள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டில் உள்ள முதல் 30 பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், அதானி போர்ட்ஸ், உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இன்ஃபோசிஸ் ஆகிய பங்குகள் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையைில் அதானி கிரீன் எனர்ஜி 21.72 %, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 15.56% உயர்ந்தது. அதானி கிரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகிய…
இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவிக்கு சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி ரூ.850 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரரும், காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, தனது மனைவி நவ்ஜோத் கவுர் சித்து கடினமான உணவு முறையை பின்பற்றி 40 நாட்களுக்குள் 4-ம் நிலை புற்றுநோயை சரி செய்ததாக அவர் கூறியிருந்தார். வெறும் 40 நாள்கள்தான் உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் கூறிய நிலையிலும், எலுமிச்சை, மஞ்சள் போன்ற சிகிச்சை எடுத்து புற்றுநோயிலிருந்து மெல்ல விடுபட்டு வருவதாக அவர் கூறியிருந்தார். இந்த கருத்துக்கள் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. நவ்ஜோத் சிங் சித்து கூறியது உண்மைக்கு முரணான தகவல் என்று சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி சார்பில் அவரது மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுபோன்ற தகவல்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும், சிகிச்சையைத் தொடராமல் இதுபோன்ற முறைகளில் செலவிட்டு ஆபத்தாக மாறக்கூடும் எனவும்…
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக பிற்பகலில் புயலாக மாறியது. இந்த புயல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது. நாளை பிற்பகல் புயல் கரையை கடக்கும் போது அதி கனமழை மற்றும் 50 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது.…
மத்திய பொதுத்துறை நிறுவனங்கள்(CPSE ) மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை இணைக்கும் வகையிலான கண்காட்சியை மத்திய எம்எஸ்எம்இ அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னை கிண்டியிலுள்ள எம்எஸ்எம்இ வளர்ச்சி மற்றும் வசதி அலுவலகத்தில், 2024 டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இந்த கண்காட்சி (CPSE & MSME Connect-2024) நடைபெறவுள்ளது. இந்திய அரசு “பொது கொள்முதல் கொள்கை 2012” (PPP) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அரசு துறைகள். & பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் ஆண்டுத் தேவைகளில் 25% பொருட்கள் மற்றும் சேவைகளை சிறு, குறு நிறுவனங்களிடமிருந்து கட்டாயமாக வாங்க வேண்டும் என்பதே இதன் முக்கிய அம்சம் ஆகும். இந்த 25% வருடாந்திர கொள்முதலில் 4% தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தோரின் நிறுவனங்களிடமிருந்தும், 3% பெண்கள் நடத்தும் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த இரண்டு நாள் நிகழ்வில், குறு மற்றும் சிறு…
நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் இடையேயான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி உற்பத்தி 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 6.7 சதவீதமாகவும், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 8.1 சதவீதமாகவும் இருந்தது. 2025-ம் நிதியாண்டின் 2-வது காலாண்டில் உற்பத்தி துறையின் வளர்ச்சி 2.2 சதவீதமாகவும், சுரங்கம் மற்றும் குவாரி துறையின் வளர்ச்சி -0.1 சதவீதமாகவும் உள்ளது. எனினும், ஒட்டுமொத்தமாக முதலாவது அரையாண்டில் 6.2 சதவீத வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகள் 2-ம் காலாண்டில் 3.5 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. அதேபோல், வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகள், 2025-ம் நிதியாண்டின் 2-ம் காலாண்டில் 6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. இது கடந்த ஆண்டில் 4.5 சதவீதமாக இருந்தது. தனியார் இறுதி நுகர்வு செலவு 2025-ம் நிதியாண்டின் 2-ம் காலாண்டில் 6…
புல்லட் ரயில்கள், சிக்னலிங் சிஸ்டம் போன்ற நவீன ரயில்வே தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா தயாராகி வருவதாக மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்திய மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புல்லட் ரயில் போன்ற முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் முன்னேற்றம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து 320 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்கட்டமைப்பு பணிகள் தயாராக உள்ளதென அதிகாரிகள் கூறியுள்ளனர். மும்பை-அகமதாபாத் புல்லட் ரயிலின் அனுபவத்தை கொண்டு எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் புல்லட் ரயில் திட்டங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், ரயில்வே பாதுகாப்பு தொழில்நுட்பமான கவாச் 5.0 அமைப்பையும் உள்நாட்டிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு 280 கிலோ மீட்டர் வேகத்திலும், சராசரியாக 250 கிமீ வேகத்திலும் செல்லும் வகையில் புல்லட் ரயில்களை உருவாக்க இந்தியா விரும்புகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை எப்போது செயல்பாட்டிற்கு வரும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது. நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி, 5ஜி சேவை எப்போது செயல்பாட்டிற்கு வருமென காலக்கெடு நிர்ணயிக்கக்கோரி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திர சேகர்,4ஜி சேவைக்கான உபகரணங்கள் கடந்த செப்டம்பரில் இருந்து நிறுவப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த ஆண்டு அக்டோபர் இறுதி வரை 50,708 4ஜி டவர்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அதில் 41,957 தளங்கள் செயல்பட்டுவருவதாகவும் தெரிவித்தார். இந்த உபகரணங்கள் அனைத்தும் 5ஜி சேவைக்கும் மேம்படுத்தக்கூடியவை என்று தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திர சேகர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார். தற்சார்பு இந்தியா முயற்சிக்கு இணங்க, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4G டவர்களை அமைப்பதற்கான பணிகளில் பிஎஸ்என்எல் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் பெம்மாசானி சந்திர சேகர் கூறினார்.
கூகுள் நிறுவனம் விதிகளை மீறியதாக ஆன்லைன் கேமிங் நிறுவனமான வின்சோ அளித்த புகாரைத் தொடர்ந்து, கூகுள் மீது விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) உத்தரவிட்டது. கூகுள் தனது ஆதிக்க நிலையையும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கான கட்டுப்பாட்டு கொள்கைகளையும் தவறாக பயன்படுத்தியதாக வின்சோ கூகுள் நிறுவனம் மீது குற்றம் சாட்டியுள்ளது. மேலும்,ப்ளே ஸ்டாரில் செயலிகளை இடம்பெற செய்ய நியாயமற்ற கட்டுப்பாடுகளை ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் தங்களது வின்சோ செயலியை தங்கள் இணையதளத்தைப் பயன்படுத்தி மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும், ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த செயலியை பதிவிறக்குவதற்கு பயனர்கள் இணையதளத்தை அணுகும்போது, எச்சரிக்கை செய்தி காட்டப்படுவதாகவும் வின்சோ தெரிவித்துள்ளது. இது இந்திய போட்டி சட்டத்தின் பிரிவுகள் 4(2)(a)(i), 4(2)(b)ஐ கூகுள் மீறியதற்கான முகாந்திரம் உள்ளதாகவும், வணிக இழப்பை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்திய போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சிசிஐ தலைமை இயக்குநர் விசாரணை மேற்கொண்டு 60…
2025 பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு வருமான வரியில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் பதிலளித்துள்ளது. 2024 பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பில் வரி செலுத்துவோருக்கு நிலைக்கழிவு எனப்படும் ஸ்டான்டர்டு டிடக்சனை 50,000-ல் இருந்து 75,000-ஆக உயர்த்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த திருத்தப்பட்ட வரி ஏப்ரல் 2025 முதல் அமலுக்கு வரும். இது சம்பளம் பெறும் ஊழியர்கள் ரூ.17,500 வரை வருமான வரியைச் சேமிக்க அனுமதிக்கும். எனினும், மூத்த குடிமக்கள் இந்த நிவாரணத்தில் சேர்க்கப்படவில்லை. மூத்த குடிமக்களுக்கான வரிச் சலுகைகள் குறித்து மல்காஜ்கிரி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈட்டால ராஜேந்தர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். மூத்த குடிமக்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.7.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கவும், ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் வரை 5 சதவீத வருமான வரி விதிக்கவும் அரசு முன்மொழிகிறதா? என்றும், மூத்த குடிமக்களுக்கான தேசிய…