உள்நாட்டு கச்சா எண்ணெய் விற்பனை, ATF எனப்படும் விமான டர்பைன் எரிபொருள் ஏற்றுமதிக்கான விண்ட்ஃபால் வரியை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் வரியையும் திரும்பப் பெற்றது.
இதற்கான அறிவிப்பை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை பல ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்ந்ததால் 2022-ல் விண்ட்ஃபால் வரி விதிக்கப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் பெறுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வரி கொண்டு வரப்பட்டது.
தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் மத்திய அரசு இந்த வரியை திரும்பப்பெற முடிவு செய்துள்ளது. இதேபோல், விமான டர்பைன் எரிபொருள் ஏற்றுமதிக்கான வரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு விமான நிறுவனங்களுக்கான இயக்கச் செலவைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விமானக் கட்டணங்கள் குறைய வாய்ப்புண்டு.