வாரத்தின் முதல் வணிக நாளான இன்று பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான செக்செக்ஸ் 200.66 புள்ளிகள் சரிந்து 81,508.46 புள்ளிகளாக நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.25% சரிவாகும். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 58.80 புள்ளிகள் சரிந்து 24,619 புள்ளிகளாக நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் 0.24% சரிவாகும்.
மும்பை பங்குச்சந்தை பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 14 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. எஞ்சிய 16 நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன. எனினும் அதிகபட்சமாக எல்&டி பங்குகள் 2.09% உயர்ந்திருந்தன. ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ் நிறுவனப் பங்குகள் -3.35% சரிந்தன.
தேசிய பங்குச்சந்தை பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் விப்ரோ, எல்&டி, டாடா ஸ்டீல், பிபிசிஎல், எச்டிஎஃப்சி லைஃப், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்திருந்தன. பொதுத் துறை வங்கிகள், வாகனங்கள், எனர்ஜி துறைகள் 0.5% வரை சரிந்திருந்தன. கடந்த வெள்ளிக்கிழமை சரிவுடன் முடிந்த நிலையில், 2-வது நாளாக பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது.