பெண்களிடையே நிதியறிவு மற்றும் காப்பீட்டு விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக எல்ஐசி புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பீமா சகி யோஜனா என்ற இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநிலம் பானிபட்டில் தொடங்கி வைத்தார்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.ஐ.சி) ‘பீமா சகி திட்டம்’ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-70 வயதுடைய பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நிதியறிவு மற்றும் காப்பீட்டு விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு, அவர்கள் எல்.ஐ.சி முகவர்களாக பணியாற்ற முடியும். மேலும் பட்டதாரி பெண்கள் எல்.ஐ.சியில் மேம்பாட்டு அதிகாரியாக இருக்க பரிசீலிக்க தகுதி பெறுவார்.
முதல் ஆண்டு முழுவதும் இந்த திட்டத்தின்கீழ் முகவர்களாக பணியாற்றுபவர்களுக்கு மாதம் ரூ.7,000 வழங்கப்படுகிறது. அடுத்தாண்டு மாத சம்பளம் ரூ.6,000 ஆக குறைக்கப்படும் எனவும், அதற்கு அடுத்து மூன்றாமாண்டில் மாதம் ரூ.5,000 ஆகவும் குறைக்கப்படும்.
எனினும், வழக்கமான ஊழியர் பலன்களைப் பெற மாட்டார்கள்.திட்டத்தில் தொடர்ந்து இருக்க பங்கேற்பாளர்கள் வருடாந்திர இலக்குகளை முடிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக அடைந்தால் அவர்களுக்கு கூடுதல் கமிஷனும் வழங்கப்படும். எல்ஐசி இணையதளம் வழியாக இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.