நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
நவம்பரில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் 8.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது
இதில், மத்திய ஜிஎஸ்டி ரூ.34,141 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.43,047 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஐஜிஎஸ்டி ரூ.91,828 கோடியாகவும், செஸ் ரூ.13,253 கோடியாகவும் உள்ளது. ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான மொத்த வசூல் ரூ.14.57 லட்சம் கோடி ஆகும்.
நவம்பர் மாதத்தில் உள்நாட்டு பரிவர்த்தனைகளின் ஜிஎஸ்டி 9.4 சதவீதம் அதிகரித்து ரூ.1.40 லட்சம் கோடியாகவும், இறக்குமதி மீதான வரி வருவாய் சுமார் 6 சதவீதம் அதிகரித்து ரூ.42,591 கோடியாகவும் உள்ளது. இதே மாதத்தில் ரூ.19,259 கோடி மதிப்பிலான ரீஃபண்ட்கள் வழங்கப்பட்டன. இது கடந்த ஆண்டை விட 8.9 சதவீதம் குறைவு ஆகும்.