டவர் நிறுவனமான இண்டஸ் டவர்ஸில் தனக்கு மீதமுள்ள 3 சதவீத பங்குகளை விற்க வோடபோன் குழுமம் முடிவு செய்துள்ளது. தனது இந்திய சொத்துக்களின் மீதுள்ள சுமார் $101 மில்லியன் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக இந்த பங்குகளை விற்பதாக லண்டன் பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம், வோடபோன் இண்டஸ் டவர்ஸில் தனக்கு இருந்த 484.7 மில்லியன் பங்குகளை விற்பனை செய்வதாக வோடபோன் நிறுவனம் அறிவித்தது. இது இண்டஸ் டவர்ஸின் பங்கில் 18 சதவீதம் ஆகும். இதன் மூலம் திரட்டப்பட்ட 1.7 பில்லியன் யூரோக்கள் வோடஃபோனின் இந்திய சொத்துக்கள் மீது வங்கியில் நிலுவையில் உள்ள கடன்களை திருப்பிச் செலுத்த பயன்படுத்தப்பட்டது. தற்போது வோடாஃபோன் நிறுவனம் தனது மீதமுள்ள 3 சதவீதம் பங்குகளான 79.2 மில்லியன் பங்குகளை விற்று, 101 மில்லியன் டாலர் நிதி திரட்டவுள்ளதாக லண்டன் பங்குச் சந்தையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
Author: Porulaathaaram Post
இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ லைட் பரிவர்த்தனைக்கான வரம்பை ரூ .1,000 லிருந்து ரூ .5,000 ஆக உயர்த்தியுள்ளது. யுபிஐ லைட் என்பது இணைய வசதியின்றி கடவுச்சொல் (பாஸ்வேர்டு) இல்லாமல் நேரடியாக பரிவர்த்தனை செய்யும் முறை ஆகும். இதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் இருந்து வாலட்டில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். மொபைல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி வாடிக்கையாளர்கள் தங்கள் வாலட்டில் ரூ.5000 வைத்திருப்பதோடு, UPI பின் இல்லாமல் ரூ.1000 செலுத்த முடியும். கூகுள்பே, போன்பே போன்ற பல செயலிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ லைட் சேவையை வழங்குகின்றன. இந்த செயல்முறையை எளிதாக்கும் வகையில் ஆட்டோ டாப்-அப் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் யுபிஐ இயங்குதளம் மூலம் 15.48 பில்லியன் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. மதிப்பின் அடிப்படையில், நவம்பர் மாதத்தில் ரூ.21.55 டிரில்லியனாக உள்ளது. இந்த புதிய மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்தூட் மைக்ரோஃபின் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் நுண்நிதி கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.25 சதவீதமும், மூன்றாம் தரப்பு பொருட்களை வாங்குவதற்கான கடனுக்கான வட்டி விகிதங்களை 1.25 சதவீதமும் குறைத்துள்ளது. அதன்படி, வருமானம் ஈட்டும் கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் 23.05% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த முத்தூட் பாப்பச்சன் குழுமத்தின் ஒரு அங்கமான முத்தூட் மைக்ரோஃபின் நிறுவனம், மூன்றாவது முறையாக கட்டணத்தை குறைத்துள்ளது. மூன்றாம் தரப்பு தயாரிப்புகளை வாங்குவதற்கான சில்லறை பாதுகாப்பற்ற கடன்களுக்கான புதிய வட்டி விகிதம் 22.7% முதல் 23.7% வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதமே முத்தூட் மைக்ரோஃபின் கட்டணங்களை மேலும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் நேற்றைய தேதிக்கு பிறகு வாங்கப்படும் அனைத்து கடன்களுக்கும் செல்லுபடியாகும். முத்தூட் மைக்ரோஃபின் இதே ஆண்டில் 3-வது முறையாக வட்டி விகிதத்தை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செயற்கைக்கோள் தகவல் தொடர்பு உரிமங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை தளர்த்துவது குறித்தும், அதன் கட்டமைப்பை சர்வதேச தரத்துடன் சீரமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க், ஜெஃப் பெசோஸின் அமேசான் கைபர் போன்ற சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க முடியும். தற்போது, குளோபல் மொபைல் பர்சனல் கம்யூனிகேஷன் பை சேட்டிலைட் என்ற அமைப்பின் கீழ் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு உரிமங்களுக்கு நிறுவனங்கள் விண்ணப்பித்து வருகின்றன. வாறு விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு 30-40 கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இந்த விதிகளில் எவற்றிற்கு தளர்வு அளிக்கப்படுமென தெரியவில்லை. அது குறித்த விவாதங்கள் நடைபெற்றுவ வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டார்லிங்க் மற்றும் அமேசான் கைபர் ஆகிய இரண்டு நிறுவங்களின் விண்ணப்பங்களும் இந்தியாவில் நிலுவையில் உள்ளன. செயற்கைக்கோள் தகவல்தொடர்பு சேவைகளின் எல்லையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க இந்திய அரசாங்கத்தை ஸ்டார்லிங்க்…
இஸ்ரேல் ராணுவம் மனித உடல்களை ஆவியாக்கும் ஆயுதங்களை காஸா மக்களின் மீது பயன்படுத்துவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேலிய படைகள் காஸாவின் வடக்கு பகுதியில் பெயரறியாத ஆயுதங்களை மக்களின் மீது பயன்படுத்துவதாகவும் , அந்த ஆயுதத்தை பயன்படுத்தினால் அது மனித உடல்களை ஆவியாக்கிவிடுவதாகவும் காஸா சுகாதாரத்துறை இயக்குநர் முனிர் அல்-புர்ஷ் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் காஸா மக்கள் மீதும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், இஸ்ரேல் பயன்படுத்தி வரும் ஆயுதங்கள் குறித்தும், காஸா மக்கள் மீது அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பாலஸ்தீன அமைப்பான ஹமாஸும், இஸ்ரேல் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்துகின்றதா என்பதை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் சுமார் 2000 உடல்களை காணவில்லை என்றும், இந்த உடல்கள் யாவும் ஆயுதங்களைக்கொண்டு ஆவியாக்கப்பட்டிருக்கலாம்…
இணைய வர்த்தக நிறுவனங்கள் தங்களது தளங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உத்தரவிட்டுள்ளது. . ஆன்லைனில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்து வரும் நிலையில், கடந்த மாதம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் இணைய வர்த்தக நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனையை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விநியோக ஊழியர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக கொண்டு செல்வது, தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் முறையான சுத்திகரிப்பு நடைமுறைகளை பின்பற்றுவது குறித்து விநியோக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக் வகையில், காலாவதி தேதிக்கு 45 நாட்களுக்கு முன்னரே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குச்சந்தை உயர்வை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், இன்றைய வர்த்தக நேர முடிவில் 597.67 புள்ளிகள் அதிகரித்து 80,845.75 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 181.10 புள்ளிகள் உயர்ந்து 24,457.15 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குச்சந்தை உயர்வை சந்தித்துள்ளது. சர்வதேச அளவில், ஆசிய சந்தைகள் ஏற்றத்தை பதிவு செய்தன. ஐரோப்பிய சந்தைகளிலும் சாதகமான போக்குகள் காணப்பட்டன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.238.28 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றாலும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,588.66 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். மும்பை பங்குச்சந்தையை பொறுத்தவரை, அதானி போர்ட்ஸ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, எல்டி ஆகிய நிறுவனங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன. கோட்டக் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, பாரதி ஏர்டெல், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.…
ஜிஎஸ்டி விகிதங்களை முறைப்படுத்துவதற்காக அமைச்சர்கள் குழு ஜவுளி உட்பட 150 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விகிதத்தை மறுசீரமைக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான ஜிஎஸ்டி விகிதங்களை முறைப்படுத்துவதற்காக அமைச்சர்கள் குழு நேற்று கூடி ஆலோசித்தது. ஜிஎஸ்டி கட்டமைப்பை எளிதாக்குவதற்காக பல்வேறு வரி விகித மாற்றங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை, ஜெய்சால்மரில் வரும் 21-ம் தேதி நடைபெறும் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஜவுளி, மிதிவண்டிகள் மற்றும் பல அத்தியாவசிய பொருட்களுக்கான வரி விகிதத்தை குறைக்க இந்த குழு பரிந்துரைத்துள்ளதாக நம்பப்படுகிறது.ரூ.1,500 வரையிலான ஜவுளி பொருட்களுக்கு 5% வரியும், ரூ.1,500 முதல் ரூ.10,000 வரையுள்ள பொருட்களுக்கு 18 சதவீத வரியும், ரூ.10,000-க்கு மேல் உள்ள ஜவுளிகளுக்கான வரியை 28 சதவீதமாக உயர்த்தி, ஆடம்பரப் பொருட்களுடன் அவற்றை சீரமைக்க இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜவுளித்துறையை…
வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா 2024 நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது வங்கி விதிமுறைகளில் பல்வேறு முக்கிய மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. இந்தியாவின் வங்கி கட்டமைப்பை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதாவை 2023-24 மத்திய பட்ஜெட்டின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934, வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949 மற்றும் பாரத ஸ்டேட் வங்கி சட்டம் 1955 உள்ளிட்ட முக்கிய சட்டங்களில் இந்த மசோதா திருத்தங்களை முன்மொழிகிறது. இந்த மசோதாவின் படி, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் அல்லது நிலையான வைப்புத்தொகைகளுக்கு நான்கு நபர்களை பிரதிநிதிகளாக நியமிக்கலாம். தற்போது ஒருவரை மட்டுமே பிரதிநிதியாக நியமிக்கலாம். கொரோனா தொற்றின்போது வாடிக்கையாளரின் மரணத்திற்கு பிறகு நிதி விநியோகிப்பதில் சிரமம் எழுந்த நிலையில், அதனை சரிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வங்கிகளின் இயக்குனர் வட்டியை மறுவரையறை செய்வதன வரம்பு ரூ. 5 லட்சத்தில்…
சமூக ஊடகங்கள் பொது மக்களின் குரலை முன்னோக்கி கொண்டு வரவும், தொழில்முனைவோரை சாதாரண மக்களுடன் இணைக்கவும் உதவியுள்ளன. இருப்பினும், சில சமயங்களில் சமூக ஊடகங்களில் எழும் விமர்சனம் கடுமையானதாக இருக்கும். அந்த வகையில், சுஷாந்த் மேத்தா என்பவர் தனது எக்ஸ் தல பக்கத்தில், மஹிந்திரா கார்களை மிக கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். கார்கள், சர்வீஸ் சென்டர்கள், உதிரி பாகங்கள் பிரச்சனைகள், பணியாளர்களின் நடத்தை போன்ற அடிப்படை பிரச்சனைகளில் மகிந்திரா நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் பதிவிட்டிருந்தார். ஊடகங்கள் முழுவதும் மகிந்திரா கார்கள் குறித்த புகார்களால் நிறைந்துள்ளதாகவும், ஹூண்டாய் கார்களுக்கு அருகில் கூட அவை நிற்கவில்லை என்று கூறியிருந்தார். இதற்கு மிக பொறுமையாக பதிலளித்துள்ள ஆனந்த் மகிந்திரா, பயனரின் இடுகையின் தொனியை ஒப்புக்கொண்ட மஹிந்திரா, 30 ஆண்டுகளுக்குப் பிறகும், தாங்கள் இன்னும் கடுமையாகப் போட்டியிடுவதாகவும், தங்கள் பதிவில் உள்ளதைப் போலவே, சுற்றியுள்ள சந்தேகம், கோபம் உள்ளிட்டவற்றை கொண்டு முன்னேறி வருவதாக…