உள்நாட்டின் முக்கியமான வங்கிகளின் (D-SIB) பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த பட்டியலில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அடங்கும். உள்நாட்டின் முக்கியமான வங்கிகள் ரிசர்வ் வங்கியால் அடையாளம் காணப்படுகின்றன. எந்தவொரு தோல்வி நிதி நெருக்கடியைத் தூண்டுவதோடு, ஒட்டு மொத்த நிதி அமைப்பிற்கே பாதிப்பை ஏற்படுத்துமோ, அந்த வங்கிகள் உள்நாட்டின் முக்கிய வங்கிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன. 2023-ம் ஆண்டில் உள்நாட்டின் முக்கிய வங்கிகளாக எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு முதல் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 2015-ம் ஆண்டு எஸ்பிஐயும், 2016-ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியும் உள்நாட்டின் சிறந்த வங்கியாக அடையாளம் காணப்பட்டது . எச்டிஎஃப்சி வங்கி 2017-ம் ஆண்டில் இந்த பட்டியலில் இடம் பெற்றது. இன்றைய வர்த்தக நேர முடிவின்போது, ஐசிஐசிஐ வங்கி யின் பங்கு 0.67 சதவீதம் குறைந்து ரூ .1,262-க்கு வர்க்கமானது.…
Author: Porulaathaaram Post
இஸ்ரேல் -ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக இஸ்ரேல் போரை தொடங்கியது. போரை நிறுத்த வேண்டுமென நாடுகள் கூறியும் இஸ்ரேல் போரை தொடர்ந்து வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் பேஜர், வாக்கி-டாக்கிகளை வெடிக்க வைத்து இஸ்ரேல் லெபனானில் தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நிர்வாகிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த போர் நிறுத்தத்தை ஈரான் உட்பட பல்வேறு நாடுகள் வரவேற்றுள்ளன. போர் ஒப்பந்தத்தை தொடர்ந்து லெபனான் நாட்டில்…
இந்திய மருந்து உற்பத்தித்துறையானது அதன் தற்போதைய சந்தை மதிப்பான $55 பில்லியனில் இருந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 58 சதவீதம் வளர்ச்சி கண்டு $130 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கிறது. அதிகரித்து வரும் ஏற்றுமதி, புதிய தொழில்நுட்பம் போன்றவற்றின் காரணமாக இந்த வளர்ச்சி எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மருந்து நிறுவனங்கள் தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு, சர்வதேச ஆராய்ச்சியிலும் பங்கேற்று வருகின்ன்றன. இந்தியாவின் மருந்து ஏற்றுமதி தற்போது $27.85 பில்லியனை எட்டியுள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் $1 டிரில்லியன் டாலர் ஏற்றுமதியை இந்திய மருத்துத்துறை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருந்து உற்பத்தியில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தையும், மதிப்பின் அடிப்படையில் 14வது இடத்தையும் பெற்றுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 சதவீதம் ஆகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை விட இந்தியாவில் உற்பத்தி செலவு 30-35 சதவீதம் குறைவு ஆகும். மேலும், இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும்…
பாதுகாப்புத்துறை மற்றும் கப்பல் கட்டும் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தை கண்டுள்ளன. இன்றைய தொடங்கியபோதே பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீதமும், பாரத் எலக்ட்ரானிஸ் நிறுவன பங்குகள் 2 சதவீதமும், எச்ஏஎல் பங்குகள் இரண்டு சதவீதமும் ஏற்றம் கண்டன. கப்பல் கட்டும் நிறுவனங்களான ஜிஆர்எஸ்இ, கொச்சின் ஷிப்யார்ட், மசாகன் டாக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3-5% வரை லாபம் கண்டுள்ளன. MTAR டெக், DCX இந்தியா போன்ற பங்குகள் கடந்த 30 நாட்களில் 10 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளன. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்கு தற்போது ரூ.307-க்கு வர்த்தகமாகி வருகிறது. அதன் விலை ரூ.340 வரை உயரும் என ஜேபி மோர்கன் இலக்கு நிர்ணயித்துள்ளது. விண்வெளி துறை சார்ந்த பங்குகளை விரும்பும் முதலீட்டாளர்களின் தேர்வாக பாரத் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளது. அதேபோல், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவன பங்குகள் ரூ.4486 ரூபாய்க்கு வர்த்தகமாகி வரும் நிலையில், ரூ.5,135 வரை உயரும் என ஜேபி…
நீல பொருளாதாரம் மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கு 2024 என்பது கடல்சார் தொழில்களுக்குள் நிலையான வளர்ச்சி மற்றும் பொருளாதார வாய்ப்புகளை மையமாகக் கொண்ட சர்வதேச நிகழ்வாகும். கடல் சார்ந்த தொழில்களை மையப்படுத்திய பொருளாதாரமே நீலப்பொருளாதாரம் என்று அழைக்கப்படுகிறது. நீல பொருளாதாரத்தில் புதுமைகள், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார உத்திகள் குறித்து விவாதிக்க கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறையினர், தொழில்முனைவோர் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளைக் கொண்ட அமர்வுகள், கொள்கை உருவாக்கம், தொழில் முனைவோருக்கான விருதுகள், தொழில்துறையினர் மற்றும் அரசு துறையை சேர்ந்தோருக்கு இடையேயான சந்திப்புகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, கடல்சார் தொழில்துறைகளில் பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பது, நிலையான நடைமுறைகளை வளர்ப்பது மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்குதல் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டது.
வங்கிகளில் அதிக மதிப்பு கொண்ட வைப்புதொகையின் பங்கு கணிசமாக உயர்ந்துள்ளது. வங்கிகளில் நிலையான வைப்பு, தொடர் வைப்பு உள்பட பல்வேறு வைப்பு திட்டங்கள் உள்ளன. ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் இடையிலான காலாண்டில், அதிக மதிப்பு கொண்ட வைப்பு தொகையின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் இருந்த 54.7 சதவீதத்திலிருந்து 68.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. டெபாசிட்களை திரட்டுவதில் பொதுத்துறை வங்கிகளை விட தனியார் வங்கிகள் முன்னிலையில் உள்ளன. அதே சமயம், கடன் வழங்குவதில் பொதுத்துறை வங்கிகள் முன்னிலையில் உள்ளன. 7 சதவீதத்துக்கும் அதிகமான வட்டி விகிதத்தைக் கொண்ட வைப்புத்தொகை, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 68.8 சதவீதமாக உள்ளது. இந்த மதிப்பு கடந்த ஆண்டு இதே காலத்தில் 54.7 சதவீதமாக இருந்தது. பல்வேறு வைப்புத்தொகை திட்டங்களில், டெர்ம் டெபாசிட்களை பொதுமக்கள் அதிக அளவில் தேர்வு செய்துள்ளனர். மொத்த வைப்புத்தொகையில் டெர்ம் டெபாசிட்களின் மதிப்பு…
விமான நிறுவனமான இண்டிகோ அக்டோபர் மாதத்தில் 86.4 லட்சம் பயணிகளுடன் மொத்த பயணத்தில் 63%-ஐ கொண்டுள்ளது . சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் 86.4 லட்சம் பயணிகளுடன் இண்டிகோ நிறுவனம், 63.3% பயணங்களை கொண்டுள்ளது. இண்டிகோவைத் தொடர்ந்து ஏர் இந்தியா குழுமம் 26.48 லட்சம் பயணிகளுடன் 19.4% சந்தைப் பங்கை கொண்டுள்ளது. விஸ்தாரா நிறுவனம் 9.1% பங்குகளுடன் 12.43 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றது. ஸ்பைஸ்ஜெட் 2.4% பங்குடன் 3.35 லட்சம் பயணிகளை ஏற்றிச்சென்றதாகவும், ஆகாசா ஏர் 4.5% பங்குடன் 6.16 லட்சம் பபணிகளை ஏற்றிச்சென்றது. திட்டமிட்ட நேரத்தில் விமானங்களை இயக்கியதிலும் இண்டிகோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் மற்றும் மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவனம் 71.9% சரியான நேரத்தில் விமானங்களை இயக்கியுள்ளது. விஸ்தாரா விமான நிறுவனம் 71.4% உடன் 2-வது இடத்திலும், ஆகாசா ஏர் 67.2% உடன்…
கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் அறிவித்துள்ளார். தாம் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் கையழுத்திடும் கோப்புகளில் இதுவும் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் விதமாக இறக்குமதிக்கு அதிக வரி விதித்தாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க எல்லைக்குள் மெக்சிகோவை சேர்ந்த புலம் பெயர்ந்தோரின் கேரவன்கள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ட்ரம்ப் 25% வரி விதித்துள்ளார். மேலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஊடுருவல் இண்டும் நிறுத்தப்படும் வரை இந்த வரி விதிப்பு நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக குடியேறுவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும்.…
மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறகுகள் என்ற சிறப்புக்கடன் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மாற்றுப்பாலினத்தவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை நிதிச் சேவைகளைப் பெறுவதில் அதிக சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில், பொருளாதார ரீதியான அவர்களின் தேவைகளை உறுதி செய்யும் ‘சிறகுகள்’ சிறப்புக்கடன் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் 5% என்ற அளவிற்கு குறைந்த வட்டியே வசூலிக்கப்படுகிறது சுயதொழில் மற்றும் சிறுவணிகம் போன்ற தேவைகளுக்கு கடன். எளிய நடைமுறைகள். தனிநபருக்கும், சுயஉதவிக் குழுக்களுக்கும் கடன் கடனை அடைத்த பிறகு மறுநாளே மீண்டும் கடன் பெறலாம். கடனளவு குறைந்த பட்சம் ரூ.5.000 முதல் அதிகபட்சம் ரூ.1,00,000 வரை. அதிகபட்சம் 36 மாத தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம் கடன் வழங்கும் நிறுவனங்கள் மாநிலத்தின் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் இக்கடன் வழங்கப்படும். தகுதி மாற்றுப் பாலினத்தவராக இருத்தல் வேண்டும். வங்கிக்கிளை…
தற்போது பயன்பாட்டில் இருக்கும் பான் கார்டை க்யூ ஆர் கோடு வசதி உடன் மேம்படுத்துவதற்காக ரூ.1,435 கோடி மதிப்பிலான 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு தனிநபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும், கண்காணிக்கவும் இணைக்கவும் வருமான வரித்துறை பான் எண்ணைப் பயன்படுத்துகிறது. இதில் உள்ள 10 இலக்க எண் அடையாள எண்ணாக செயல்படுகிறது. தற்போது, ரூ.1,435 கோடி மதிப்பில் பான் அட்டைகளை க்யூ.ஆர் கோடு வசதியுடன் மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பான் 2.0 இன் அம்சங்கள் என்ன? பான் அட்டைகள் க்யூ.ஆர் கோடு வசதியுடன் மேம்படுத்தப்படும். இந்தத் திட்டம் மூலம் தற்போது பான் அட்டை வைத்துள்ள 78 கோடி பேர், தங்கள் பான் அட்டைகளை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். இதில், பான் எண் மாறாது. பான் அட்டை மட்டும் கூடுதல் பாதுகாப்பு மற்றும் தரவு அம்சங்களுடன் மேம்படுத்தப்படும். இதே போல், தொழில்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று,…