புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளில் 98.% வங்கிக்கு திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2023 மே 19 அன்று ரூ.2,000 மதிப்புள்ள நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது ரூ.3.56 லட்சம் கோடி நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2024 நவம்பர் 29 அன்று ரூ.6,839 கோடி ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இதன்படி, புழக்கத்திலிருந்த ரூ.2,000 நோட்டுகளில் 98.08% திருப்பித் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2023 அக்டோபர் 7-ம் தேதி வரை அனைத்து வங்கிக் கிளைகளிலும் ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் மற்றும் அல்லது மாற்றுவதற்கான வசதி அனுமதிக்கப்பட்டது. தற்போதும், சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், பெங்களூரு, , போபால், புவனேஸ்வர், சண்டிகர், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, நாக்பூர், பாட்னா மற்றும் திருவனந்தபுரம் உள்பட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும். அதேபோல், நாட்டின்…
Author: Porulaathaaram Post
போக்குவரத்து சேவையளித்து வரும் முன்னணி நிறுவனமான ‘ஊபர்’ இந்தியாவில் முதல்முறையாக நீர்வழிப் போக்குவரத்து சேவையை தொடங்கியுள்ளது. ஊபர் நிறுவனம் உலகம் முழுவதும் கார், ஆட்டோ, இரு சக்கர வாகன வாடகை வாகன சேவையை அளித்து வருகிறது. தற்போது இந்தியாவில் முதன்முறையாக படகு சேவையையும் ஊபர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரின் தல் ஏரியில் ஊபர் ஷிகாரா என்ற பெயரில் படகு போக்குவரத்து சேவையை ஊபர் நிறுவனம் தொடங்கியுள்ளது. வெனிஸ் நகரில் இதே போன்று படகு போக்குவரத்து சேவை சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் காஷ்மீரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையையும் பயணிகள் செயலி வாயிலாக முன்பதிவு செய்ய இயலும். குறைந்தபட்சமாக 12 மணி நேரத்துக்கு முன்பாகவும், அதிகபட்சமாக 15 நாட்களுக்கு முன்பாகவும் இந்த சேவையை முன்பதிவு செய்து கொள்ளலாம். அரசு நிர்ணயித்துள்ள கட்டணமே இந்த படகு சவாரிக்கு வசூலிக்கப்படுகிறது. வசூலிக்கப்படும் கட்டணம் முழுவதும் ஓட்டுநர்களுக்கே செல்லும் என்றும், ஊபர்’ நிறுவனத்தால் சேவைக்…
அமெரிக்காவில் விசா முறைகேட்டில் ஈடுப்பட்டதாகக் கூறி இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு ரூ.283 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெச் 1பி விசாக்களுக்குப் பதிலாக பி-1 விசா வழங்கியதாக எழுந்த புகாரில் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்தியா உள்பட 22 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்காவில் குடியுறவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அமெரிக்காவில் பணியமர்த்திய தனது ஊழியர்களுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் ஹெச் 1பி விசாக்களுக்குப் பதிலாக பி-1 பார்வையாளர் விசாக்களை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறியதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 283 கோடி (34 மில்லியன் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையின் ஒரு பகுதியாக ரூ. 238 கோடியை செலுத்த இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை அமெரிக்காவில் இந்திய நிறுவனம் ஒன்றிற்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதம் இதுவே ஆகும்.
உள்நாட்டு கச்சா எண்ணெய் விற்பனை, ATF எனப்படும் விமான டர்பைன் எரிபொருள் ஏற்றுமதிக்கான விண்ட்ஃபால் வரியை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் வரியையும் திரும்பப் பெற்றது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை பல ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்ந்ததால் 2022-ல் விண்ட்ஃபால் வரி விதிக்கப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் பெறுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வரி கொண்டு வரப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் மத்திய அரசு இந்த வரியை திரும்பப்பெற முடிவு செய்துள்ளது. இதேபோல், விமான டர்பைன் எரிபொருள் ஏற்றுமதிக்கான வரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு விமான நிறுவனங்களுக்கான இயக்கச் செலவைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விமானக் கட்டணங்கள்…
இந்திய கப்பல் துறையை நவீனமயமாக்கும் மற்றும் சீரமைக்கும் நோக்கில் மத்திய அரசு மக்களவையில் கடலோர கப்பல் போக்குவரத்து மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதா பெரிய துறைமுகங்களில் போக்குவரத்தை அதிகரிக்கவும், குறிப்பாக உள்நாட்டு கப்பல் நிறுவனங்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வழிவகுக்கும். மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால் மக்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை கடந்த அக்டோபர் மாதம் ஒப்புதல் வழங்கியது. இந்திய கப்பல்கள் சர்வதேச அளவுகோல்களை சந்திக்க உதவுவதோடு, சர்வதேச கடல் வர்த்தகத்தில் இந்திய நிறுவனங்கள் அதிக போட்டித்தன்மையுடன் இருக்க உதவும் நோக்கத்துடன் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், தகவல் பகிர்வுக்கு உதவ கப்பல் போக்குவரத்துக்கான தேசிய தரவுத்தளத்தை உருவாக்கவும் இந்த மசோதா முயல்கிறது. சுமார் 7,500 கிலோமீட்டர் நீளமுள்ள பரந்த கடற்கரை மற்றும் முக்கியமான சர்வதேச கப்பல் வழித்தடங்களுக்கு அருகாமையில்…
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியாவின் அதிபராக கடந்த 2000-ம் ஆண்டு முதல் பஷர் அல் அசாத் ஆட்சியில் உள்ளார். ஏற்கனவே, 2011-ம் ஆண்டில் உள்நாட்டு போர் வெடித்தபோது, ரஷ்ய அதிபர் புதின் தலையீட்டால் பஷர் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார். அதன் பிறகு பெரிதாக கலவரங்கள் ஏற்படாத நிலையில் தற்போது மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. ஹயாத் தஹ்ரிர் அல் ஹா என்ற கிளர்ச்சி அமைப்பு ராணுவத்துடன் சண்டையிட தொடங்கியுள்ளது. அலெப்போ நகரின் பெரும்பகுதியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கஸில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ நகர் முக்கிய நகரமாக இருந்து வருகிறது. அத்தகைய நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த முறையும் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த…
விண்வெளித் துறையில் இத்தாலியின் சாதனைகளைக்கொண்டாடும் வகையில், மும்பையில் கடல் மற்றும் விண்வெளி பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு கடந்த 29-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. புதிய விண்வெளி திட்டங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பது மற்றும் இரு தரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இந்த மாநாட்டில் முக்கிய விவாதங்கள் நடைபெற்றன. இரு நாடுகளை சேர்ந்த முக்கிய நிறுவனங்கள் இதில் பங்கேற்றதோடு, இத்தாலி அமைச்சர் அடோல்போ உர்சோ பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், தென்கிழக்கு ஆசியாவில் செயல்பட விரும்பும் இத்தாலிய நிறுவனங்களுக்கு இந்தியா அடிப்படையாக இருக்க முடியும் என்று கூறினார்.கடல் கடல் மற்றும் விண்வெளி பொருளாதாரத்தில் இரு நாடுகளும் கொண்டுள்ள தொழில்நுட்ப அறிவை அவர் எடுத்துரைத்தார். காலநிலை மாற்றம், விண்வெளி ஆய்வு, கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிமென்ட் மற்றும் எஃகு போன்றவற்றின் நுகர்வு அதிகரித்தாலும் அவற்றில் இருப்பு குறைந்துள்ளது. மத்திய புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, சிமென்ட் மற்றும் எஃகு ஆகியவற்றின் இருப்பு குறைந்துள்ளது. தேவை அதிகமாக இருந்தாலும் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்ததே இதற்கு காரணமாக கருதப்படுகிறது. அண்மையில் வெளியான நாட்டின் உள்நாட்டு உற்பத்தி தரவின்படி உற்பத்தித்துறை சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 10.3 சதவீதமாக இருந்த சிமெண்ட் உற்பத்தி வளர்ச்சி, இந்த ஆண்டு 3 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 17.7 சதவீதமாக இருந்த எஃகு உற்பத்தி, 12 சதவீதமாக குறைந்துள்ளது. இறக்குமதி அதிகமாக இருப்பதால் உற்பத்தி குறைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதியின் அழுத்தத்தால் உற்பத்தியாளர்கள்விற்பனையில் சலுகை தர வேண்டிய நிலை இருப்பதால், உற்பத்தியை திட்டமிட்டே குறைந்துள்ளதாக கருதப்படுகிறது. பண்டிகை காலத்திற்கு பிறகு கட்டுமான பொருட்களின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த நிலை மாறுமென நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பிரிக்ஸ் நாடுகள் டாலரை தவிர்த்து மாற்று நாணயத்தில் ஈடுபட விரும்பினால், 100% வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். BRICS நாடுகள் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ‘பிரிக்ஸ்’ நாடுகள் கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. அப்போது,பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே நிதி ஒத்துழைப்பை மேம்படுத்த எடுக்கப்பட்ட தீர்மானங்களில் பிரிக்ஸ் நாடுகளும், அவற்றின் வா்த்தக கூட்டாளிகளும் உள்ளூா் நாணயத்தில் பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்வதை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புதிய நாணயத்தை உருவாக்குவதோ அல்லது அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு நாணயத்தைக் கொண்டு வருவதோ நடக்காது என பிரிக்ஸ் நாடுகள்…
நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நவம்பரில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் 8.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது இதில், மத்திய ஜிஎஸ்டி ரூ.34,141 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.43,047 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஐஜிஎஸ்டி ரூ.91,828 கோடியாகவும், செஸ் ரூ.13,253 கோடியாகவும் உள்ளது. ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான மொத்த வசூல் ரூ.14.57 லட்சம் கோடி ஆகும். நவம்பர் மாதத்தில் உள்நாட்டு பரிவர்த்தனைகளின் ஜிஎஸ்டி 9.4 சதவீதம் அதிகரித்து ரூ.1.40 லட்சம் கோடியாகவும், இறக்குமதி மீதான வரி வருவாய் சுமார் 6 சதவீதம் அதிகரித்து ரூ.42,591 கோடியாகவும் உள்ளது. இதே மாதத்தில் ரூ.19,259 கோடி மதிப்பிலான ரீஃபண்ட்கள் வழங்கப்பட்டன. இது கடந்த ஆண்டை விட 8.9 சதவீதம் குறைவு ஆகும்.