சிமென்ட் மற்றும் எஃகு போன்றவற்றின் நுகர்வு அதிகரித்தாலும் அவற்றில் இருப்பு குறைந்துள்ளது.
மத்திய புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, சிமென்ட் மற்றும் எஃகு ஆகியவற்றின் இருப்பு குறைந்துள்ளது. தேவை அதிகமாக இருந்தாலும் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்ததே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.
அண்மையில் வெளியான நாட்டின் உள்நாட்டு உற்பத்தி தரவின்படி உற்பத்தித்துறை சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 10.3 சதவீதமாக இருந்த சிமெண்ட் உற்பத்தி வளர்ச்சி, இந்த ஆண்டு 3 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 17.7 சதவீதமாக இருந்த எஃகு உற்பத்தி, 12 சதவீதமாக குறைந்துள்ளது.
இறக்குமதி அதிகமாக இருப்பதால் உற்பத்தி குறைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதியின் அழுத்தத்தால் உற்பத்தியாளர்கள்விற்பனையில் சலுகை தர வேண்டிய நிலை இருப்பதால், உற்பத்தியை திட்டமிட்டே குறைந்துள்ளதாக கருதப்படுகிறது. பண்டிகை காலத்திற்கு பிறகு கட்டுமான பொருட்களின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த நிலை மாறுமென நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.