நீல பொருளாதாரம் மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கு 2024 என்பது கடல்சார் தொழில்களுக்குள் நிலையான வளர்ச்சி மற்றும் பொருளாதார வாய்ப்புகளை மையமாகக் கொண்ட சர்வதேச நிகழ்வாகும். கடல் சார்ந்த தொழில்களை மையப்படுத்திய பொருளாதாரமே நீலப்பொருளாதாரம் என்று அழைக்கப்படுகிறது.
நீல பொருளாதாரத்தில் புதுமைகள், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார உத்திகள் குறித்து விவாதிக்க கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறையினர், தொழில்முனைவோர் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளைக் கொண்ட அமர்வுகள், கொள்கை உருவாக்கம், தொழில் முனைவோருக்கான விருதுகள், தொழில்துறையினர் மற்றும் அரசு துறையை சேர்ந்தோருக்கு இடையேயான சந்திப்புகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, கடல்சார் தொழில்துறைகளில் பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பது, நிலையான நடைமுறைகளை வளர்ப்பது மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்குதல் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டது.