2025-ம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவிற்கான அந்நிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூர் 50% பங்களித்துள்ளது.
இந்த காலாண்டில் இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீடு 43 சதவீதம் அதிகரித்து 13.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இதில் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளது. ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2024 வரை சிங்கப்பூரின் மொத்த அந்நிய நேரடி முதலீடு சுமார் 159.94 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இந்தியாவிற்கான அந்நிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூர் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த நிதியாண்டில் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இருந்து 11.77 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது.
ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2024 வரை சிங்கப்பூரில் இருந்து சுமார் 159.94 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது. இருதரப்பு வர்த்தகத்தில், 2023-24-ம் ஆண்டில் இந்தியாவின் ஆறாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக சிங்கப்பூர் உள்ளது.