பிளாஸ்டிக் அச்சுறுத்தலுக்கு மாற்றாக கடலில் கரையும் பிளாஸ்டிக்கை ஜப்பானை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் நீண்ட கால பிரச்சினைகளில் ஒன்றாகும். இதற்கு தீர்வு கண்டறியும் வகையில் ஜப்பானை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடலில் கரையும் பிளாஸ்டிக்கை வடிவமைத்துள்ளனர்.
இந்த பிளாஸ்டிக்கை பேக்கிங், மருத்துவ சாதனங்கள் உள்பட பல்வேறு செயல்பாடுகளுக்காக பயன்படுத்தலாம். சாதாரண பிளாஸ்டிக்குகள் மக்குவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகும். இந்த பிளாஸ்டிக் கடல் நீரில் சில மணிநேரங்களில் கரைந்து, நீண்ட கால சுற்றுச்சூழல் மாசுபாட்டை நீக்குகிறது. இந்த பிளாஸ்டிக் மண்ணில் மக்க 10 நாட்கள் ஆகின்றது. மக்கியதும் மண்ணின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வளப்படுத்துகிறது.
இந்த மக்கும் பிளாஸ்டிக்கின் மிக முக்கியமான நன்மை என்னவென்றால் மக்கும்போது கார்பன் டை ஆக்சைடை வெளியிடாது. மேலும், இதனை எளிதாக எளிதில் மறுசுழற்சி செய்யலாம்