சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியாவின் அதிபராக கடந்த 2000-ம் ஆண்டு முதல் பஷர் அல் அசாத் ஆட்சியில் உள்ளார். ஏற்கனவே, 2011-ம் ஆண்டில் உள்நாட்டு போர் வெடித்தபோது, ரஷ்ய அதிபர் புதின் தலையீட்டால் பஷர் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார்.
அதன் பிறகு பெரிதாக கலவரங்கள் ஏற்படாத நிலையில் தற்போது மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. ஹயாத் தஹ்ரிர் அல் ஹா என்ற கிளர்ச்சி அமைப்பு ராணுவத்துடன் சண்டையிட தொடங்கியுள்ளது. அலெப்போ நகரின் பெரும்பகுதியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ நகர் முக்கிய நகரமாக இருந்து வருகிறது. அத்தகைய நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த முறையும் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 300க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.