Author: Porulaathaaram Post

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு (FOREX) கடந்த 50 நாட்களில் $47 பில்லியன் குறைந்துள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியா தொடர்ந்து 7-வது வாரமாக அந்நிய செலாவணி கையிருப்பில் சரிவைக் கண்டது. இந்த வாரத்தில் மட்டும் சுமார் 18 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 50 நாட்களில் சுமார் 29 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 17.761 பில்லியன் டாலர் குறைந்து 657.892 பில்லியன் டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவின் தங்க கையிருப்பு குறைகிறது ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, இந்தியாவின் வெளிநாட்டு நாணயச் சொத்துகள், 569.835 பில்லியன் டாலராக உள்ளன. நாட்டின் தங்க கையிருப்பு…

Read More

இலங்கை, வங்கதேசம், ஜப்பான், சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து ஆப்பிள்கள், மதுபானங்கள் மற்றும் சுஷி ஆகியவற்றின் இறக்குமதிக்கு இந்தியா இந்த ஆண்டு தடை விதித்துள்ளது. ஏனெனில் அவை நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட குறைவாக இருந்தன. இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் (FSSAI) அண்மையில் உணவு இறக்குமதி நிராகரிப்பு எச்சரிக்கை (FIRA) தளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த தளத்தில், எந்தெந்த நாடுகளில் இருந்து உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது வெளியிடப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (இறக்குமதி) ஒழுங்குமுறை, 2017 இன் விதிமுறை 11(7), உணவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கிறது FIRA தளத்தின் தகவலின் படி, FSSAI இலங்கையில் இருந்து இலவங்கப்பட்டை பூ மொட்டுகளை மே 24 அன்று பெங்களூரில் நிராகரித்தது. பல்வேறு குறைபாடுகள் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஏப்ரல் 22 அன்று இலங்கை பருப்புகள் நிராகரிக்கப்பட்டன.…

Read More

இந்தியாவின் ஜவுளித்துறையில் அடுத்த சில ஆண்டுகளில் எழுச்சி ஏற்படுமென நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் சர்வதேச அளவில் ஜவுளி வர்த்தகத் துறையின் அளவு $800 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் ஏற்றுமதி பங்களிப்பு மட்டும் சுமார் $35 பில்லியன் ஆகும். சமீபத்தில், மத்திய அரசு 2030-ம் ஆண்டிற்குள் $100 பில்லியன் டாலர்களை எட்டுவதற்கான இலக்கை அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 200,000 கோடி ரூபாய் முதலீடுகள் மட்டுமின்றி 30 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் கிடைக்கும். இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில், ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம், கொரோனா போன்றவற்றின் காரணமாக இந்தியாவில் ஜவுளி ஏற்றுமதி தேக்கமடைந்தது. புவிசார் அரசியல் நிலவரம் மற்றும் அதிக உற்பத்தி செலவு காரணமாக, பல சர்வதேச நிறுவனங்கள், சீனாவில் இருந்து இறக்குமதியை குறைக்க விரும்புகின்றன. ஏற்கனவே பல நாடுகள் இதற்கான பணிகளில் இறங்கியுள்ளன. மேலும், ஆடை வர்த்தகத்தில் வலுவான நாடாக பார்க்கப்பட்ட வங்கதேசத்தில் தற்போது…

Read More

கனடாவின் மாண்ட்ரீல் நகரில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியுள்ள நிலையில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இசை நிகழ்ச்சியில் நடனமாடும் வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மாண்ட்ரீல் நகரில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உருவ பொம்மையை எரித்தனர். யூதர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென வன்முறையில் இறங்கியுயள்ளனர். இந்நிலையில், டொராண்டோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் கலந்துகொண்டார். அப்போது, நிகழ்ச்சியில் அவர் நடனமாடியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாண்ட்ரீல் நகரில் பதற்றமான சூழல் நிலவிவரும் சூழலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பொறுப்பற்ற இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Read More

பிரிட்டனில் பெய்து வரும் கடுமையான பனிப்பொழிவினால் அங்கு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவு அடுத்த வாரம் வரை தொடரும் என எதிர் பார்க்கப்படுகிறது. சுமார் 3 செமீ பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பல்வேறு இடங்களில் சாலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிரேட்டர் மான்செஸ்டர், பிரினிங்டன் ஹில், ஓட்டர்ஸ்பூல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் நாளை பனிப்புயல் வீச வாய்ப்புள்ளதால், லங்காஷயர், வடக்கு யார்க்ஷயர், கும்ப்ரியா உட்பட இங்கிலாந்தின் வடபகுதியில் பயண தாமதங்கள், மின்வெட்டு உள்ளிட்ட இடையூறுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெர்ட் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல், இந்த ஆண்டின் 2-வது பனிப்புயலாகும். பொதுமக்கள் வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும், அத்தியாவசியமான பயணங்களை மட்டும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, உலக வரலாற்றிலேயே பணக்கார தனி நபராக மாறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு டெஸ்லாவின் பங்கு 40 சதவீதம் உயர்ந்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 334.3 பில்லியன் டாலராகும். நேற்று மற்றும் அவரது நிறுவன பங்குகள் 3.8 சதவீதம் உயர்ந்துள்ளன. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத உயர்வு ஆகும். அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ட்ரம்ப்பின் நிர்வாகத்தில் வேளாண் மஸ்க்கிற்கு ,உக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. டிரம்ப்புடன் மஸ்க் இணைந்திருப்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ட்ரம்ப்பின் பிரச்சாரத்திற்கு $100 மில்லியனுக்கும் அதிகமாக எலான் மஸ்க் நன்கொடை வழங்கினார். மேலும், அமெரிக்க நிர்வாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திறன் துறையின் தலைவராகவும் மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார். இது டெஸ்லாவின் தானியங்கி கார் திட்டத்திற்கு பயனளிக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். உலகின் 2-வது பணக்காரராக உள்ள ஆரக்கிள் தலைவர் லாரி…

Read More

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இது பங்குச்சந்தையில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியான பின்னரே பங்குச்சந்தை ஏற்றம் கண்ட நிலையில், தேர்தல் முடிவுகள் திங்கட்கிழமையன்று பங்குச்சந்தையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே, உட்கட்டமைப்பு மற்றும் வங்கிகள் பங்குகள் ஏற்றம் காணுமென நிபுணர்கள் கணித்துள்ளனர். முன்னதாக, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பார்மா உள்ளிட்ட பங்குகளை அதிக அளவில் வாங்கினர். மகாராஷ்டிராவில் வலுவான அரசு அமைந்துள்ளதால் பங்குச்சந்தை ஏற்றம் காணுமெனவும், வணிக சார்பு கொள்கைகள் அதிகமாக கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Read More

கென்யாவில் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என அதானி குழுமம் மறுத்துள்ளது. அமெரிக்க நீதிமன்றம் தொழிலதிபர் அதானி அரசு அதிகாரிகளுக்கு பல ஆயிரம் கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் நிதிதிரட்டி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டியது. அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றம் லஞ்சப்புகார் சுமத்தியதை தொடர்ந்து, அந்நிறுவனத்துடன் போடப்பட்ட 2.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை கென்ய அரசு ரத்து செய்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அதானி குழுமத்திற்கு செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அதானி குழுமம், கென்யாவில் 30 ஆண்டுகளுக்கு மின்சார பகிர்மானத்திற்கு அதானி குழுமம் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை எனவும், அது செபியின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக அதானி நிறுவனத்திற்கோ அல்லது அதன் துணை நிறுவனங்களுக்கோ கென்யாவின் விமான நிலையம் தொடர்பாக எந்த ஒரு திட்டமும் வழங்கப்படவில்லை என அதானி குழுமம் கூறியுள்ளது.

Read More

தமிழ் வர்த்தக சங்கம் சார்பில் சுயதொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. சர்வதேச தொழில் முனைவோர் வார விழாவின் ஆறாம் நாளை ஒட்டி இணைய வாயிலாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல தொழில் முனைவோர் தங்களது தயாரிப்பு மற்றும் சேவைகளை அறிமுகம் செய்து வைத்தனர். தமிழ் வர்த்தக சங்ககத்தின் தலைவர் சோழ நாச்சியார் ராஜசேகர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார். சிறு சுயதொழில் முனைவோருக்கு இந்நிகழ்ச்சியில் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தில் ஈடுபட விரும்புவோருக்கான வழிகாட்டுதல்களும், அரசு சார்பில் அதற்காக உள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ் வர்த்தக சங்கம் முழுக்க முழுக்க தொழில் முனைவோருக்காக செயல்பட்டு வருகிறது. சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு 1944-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதனை தோற்றுவித்தவர்களில் ஒருவரான ஆர்.கே. சண்முகம் செட்டி, சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்தவர் ஆவார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நாட்டின்…

Read More

நாட்டிலுள்ள பெரிய நகரங்களில் வீட்டுத் திட்டங்களுக்கான சராசரி கட்டுமானச் செலவு கடந்த நான்கு ஆண்டுகளில் 39 சதவீதம் அதிகரித்து ஒரு சதுர அடிக்கு ரூ. 2,780 ஆக உயர்ந்துள்ளது. ரியல் எஸ்டேட் ஆலோசகரான Colliers India-வின் தகவலின்படி, வீட்டுத் திட்டங்களுக்கான சராசரி கட்டுமானச் செலவு 2021 அக்டோபரில் ஒரு சதுர அடிக்கு ரூ.2,200 ஆகவும், 2022 அக்டோபரில் சதுர அடிக்கு ரூ.2,300 ஆகவும், 2023 அக்டோபரில் சதுர அடிக்கு ரூ.2,500 ஆகவும், 2024 அக்டோபரில் சதுர அடிக்கு ரூ.2,780 ஆகவும் கட்டுமானச் செலவு உயர்ந்துள்ளது. முன்னணி நகரங்களில் 15 மாடிகளைக் கொண்ட முதல் தர குடியிருப்புக் கட்டிடத்திற்கு சராசரியாக இந்த செலவுகள் ஏற்படுவதாக Colliers India கூறியுள்ளது. கட்டுமானப் பொருட்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஊதியம் உயர்ந்துள்ளதாக Colliers India கூறியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் மணல், செங்கல், கண்ணாடி, மரம் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் தொழிலாளர்களின் ஊதியம்…

Read More