கனடாவின் மாண்ட்ரீல் நகரில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியுள்ள நிலையில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இசை நிகழ்ச்சியில் நடனமாடும் வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மாண்ட்ரீல் நகரில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உருவ பொம்மையை எரித்தனர். யூதர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென வன்முறையில் இறங்கியுயள்ளனர். இந்நிலையில், டொராண்டோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் கலந்துகொண்டார். அப்போது, நிகழ்ச்சியில் அவர் நடனமாடியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாண்ட்ரீல் நகரில் பதற்றமான சூழல் நிலவிவரும் சூழலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பொறுப்பற்ற இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
Author: Porulaathaaram Post
பிரிட்டனில் பெய்து வரும் கடுமையான பனிப்பொழிவினால் அங்கு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவு அடுத்த வாரம் வரை தொடரும் என எதிர் பார்க்கப்படுகிறது. சுமார் 3 செமீ பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பல்வேறு இடங்களில் சாலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிரேட்டர் மான்செஸ்டர், பிரினிங்டன் ஹில், ஓட்டர்ஸ்பூல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் நாளை பனிப்புயல் வீச வாய்ப்புள்ளதால், லங்காஷயர், வடக்கு யார்க்ஷயர், கும்ப்ரியா உட்பட இங்கிலாந்தின் வடபகுதியில் பயண தாமதங்கள், மின்வெட்டு உள்ளிட்ட இடையூறுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெர்ட் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல், இந்த ஆண்டின் 2-வது பனிப்புயலாகும். பொதுமக்கள் வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும், அத்தியாவசியமான பயணங்களை மட்டும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, உலக வரலாற்றிலேயே பணக்கார தனி நபராக மாறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு டெஸ்லாவின் பங்கு 40 சதவீதம் உயர்ந்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 334.3 பில்லியன் டாலராகும். நேற்று மற்றும் அவரது நிறுவன பங்குகள் 3.8 சதவீதம் உயர்ந்துள்ளன. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத உயர்வு ஆகும். அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ட்ரம்ப்பின் நிர்வாகத்தில் வேளாண் மஸ்க்கிற்கு ,உக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. டிரம்ப்புடன் மஸ்க் இணைந்திருப்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ட்ரம்ப்பின் பிரச்சாரத்திற்கு $100 மில்லியனுக்கும் அதிகமாக எலான் மஸ்க் நன்கொடை வழங்கினார். மேலும், அமெரிக்க நிர்வாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திறன் துறையின் தலைவராகவும் மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார். இது டெஸ்லாவின் தானியங்கி கார் திட்டத்திற்கு பயனளிக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். உலகின் 2-வது பணக்காரராக உள்ள ஆரக்கிள் தலைவர் லாரி…
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இது பங்குச்சந்தையில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியான பின்னரே பங்குச்சந்தை ஏற்றம் கண்ட நிலையில், தேர்தல் முடிவுகள் திங்கட்கிழமையன்று பங்குச்சந்தையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே, உட்கட்டமைப்பு மற்றும் வங்கிகள் பங்குகள் ஏற்றம் காணுமென நிபுணர்கள் கணித்துள்ளனர். முன்னதாக, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பார்மா உள்ளிட்ட பங்குகளை அதிக அளவில் வாங்கினர். மகாராஷ்டிராவில் வலுவான அரசு அமைந்துள்ளதால் பங்குச்சந்தை ஏற்றம் காணுமெனவும், வணிக சார்பு கொள்கைகள் அதிகமாக கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கென்யாவில் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என அதானி குழுமம் மறுத்துள்ளது. அமெரிக்க நீதிமன்றம் தொழிலதிபர் அதானி அரசு அதிகாரிகளுக்கு பல ஆயிரம் கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் நிதிதிரட்டி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டியது. அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றம் லஞ்சப்புகார் சுமத்தியதை தொடர்ந்து, அந்நிறுவனத்துடன் போடப்பட்ட 2.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை கென்ய அரசு ரத்து செய்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அதானி குழுமத்திற்கு செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அதானி குழுமம், கென்யாவில் 30 ஆண்டுகளுக்கு மின்சார பகிர்மானத்திற்கு அதானி குழுமம் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை எனவும், அது செபியின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக அதானி நிறுவனத்திற்கோ அல்லது அதன் துணை நிறுவனங்களுக்கோ கென்யாவின் விமான நிலையம் தொடர்பாக எந்த ஒரு திட்டமும் வழங்கப்படவில்லை என அதானி குழுமம் கூறியுள்ளது.
தமிழ் வர்த்தக சங்கம் சார்பில் சுயதொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. சர்வதேச தொழில் முனைவோர் வார விழாவின் ஆறாம் நாளை ஒட்டி இணைய வாயிலாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல தொழில் முனைவோர் தங்களது தயாரிப்பு மற்றும் சேவைகளை அறிமுகம் செய்து வைத்தனர். தமிழ் வர்த்தக சங்ககத்தின் தலைவர் சோழ நாச்சியார் ராஜசேகர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார். சிறு சுயதொழில் முனைவோருக்கு இந்நிகழ்ச்சியில் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தில் ஈடுபட விரும்புவோருக்கான வழிகாட்டுதல்களும், அரசு சார்பில் அதற்காக உள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ் வர்த்தக சங்கம் முழுக்க முழுக்க தொழில் முனைவோருக்காக செயல்பட்டு வருகிறது. சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு 1944-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதனை தோற்றுவித்தவர்களில் ஒருவரான ஆர்.கே. சண்முகம் செட்டி, சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்தவர் ஆவார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நாட்டின்…
நாட்டிலுள்ள பெரிய நகரங்களில் வீட்டுத் திட்டங்களுக்கான சராசரி கட்டுமானச் செலவு கடந்த நான்கு ஆண்டுகளில் 39 சதவீதம் அதிகரித்து ஒரு சதுர அடிக்கு ரூ. 2,780 ஆக உயர்ந்துள்ளது. ரியல் எஸ்டேட் ஆலோசகரான Colliers India-வின் தகவலின்படி, வீட்டுத் திட்டங்களுக்கான சராசரி கட்டுமானச் செலவு 2021 அக்டோபரில் ஒரு சதுர அடிக்கு ரூ.2,200 ஆகவும், 2022 அக்டோபரில் சதுர அடிக்கு ரூ.2,300 ஆகவும், 2023 அக்டோபரில் சதுர அடிக்கு ரூ.2,500 ஆகவும், 2024 அக்டோபரில் சதுர அடிக்கு ரூ.2,780 ஆகவும் கட்டுமானச் செலவு உயர்ந்துள்ளது. முன்னணி நகரங்களில் 15 மாடிகளைக் கொண்ட முதல் தர குடியிருப்புக் கட்டிடத்திற்கு சராசரியாக இந்த செலவுகள் ஏற்படுவதாக Colliers India கூறியுள்ளது. கட்டுமானப் பொருட்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஊதியம் உயர்ந்துள்ளதாக Colliers India கூறியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் மணல், செங்கல், கண்ணாடி, மரம் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் தொழிலாளர்களின் ஊதியம்…
மும்பை பங்குச்சந்தையான பிஎஸ்இ-யில் இருந்து வரும் டிசம்பர் 23-ம் தேதி முதல் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவன பங்குகள் நீக்கப்படும் என்றும், அதற்கு பதிலாக ஜொமேட்டோ பங்குகள் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக BSE 100, BSE சென்செக்ஸ் 50 மற்றும் BSE சென்செக்ஸ் நெக்ஸ்ட் 50 உட்பட பல முக்கிய குறியீடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன . ஆறு மாத சந்தை செயல்பாட்டின் அடிப்படையில் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் சேர்க்கவோ, நீக்கவோ படுகின்றன இதேபோல் அசோக் லேலண்ட், பிஐ இண்டஸ்ட்ரீஸ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், ஐஆர்சிடிசி, யுபிஎல் மற்றும் ஏபிஎல் அப்பல்லோ டியூப் பங்குகள் வரும் டிசம்பர் 23-ம் தேதி முதல் BSE 100-ல் நீக்கப்பட்டு அவற்றிற்கு பதில் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், சுஸ்லான் எனர்ஜி, அதானி க்ரீன் எனர்ஜி, அதானி பவர், சம்வர்தனா மதர்சன் மற்றும் பிபி ஃபின்டெக் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. ஹெச்டிஎப்சி லைவ், பிபிசிஎல் மற்றும் எல்டிஐ…
பிட்காயினின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 99289 டாலரை எட்டியது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே ஏற்றம் கண்டு வரும் பிட்காயின், இன்று புதிய உச்சம் கண்டுள்ளது. ட்ரம்பின் சமூக ஊடக நிறுவனமான ட்ரூத் சோஷியல் கிரிப்டோ வர்த்தக தளமான பக்த்-ஐ வாங்கவுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இந்த உயர்வு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகபட்சமாக 99289 டாலரை எட்டிய பிட்காயினின் மதிப்பு, இன்றைய வர்த்தக நேர முடிவில் 97,594.85 அமெரிக்க டாலராக இருந்தது. பிட்காயின் மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. கிரிப்டோகரன்சி வணிகத்துக்கு ட்ரம்ப் அரசு ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கிரிப்டோகரன்சி சந்தையில் ஏற்றம் நீடிக்கிறது கடந்த இரண்டு வாரங்களில் 40% மேல் பிட்காயினின் மதிப்பு உயர்ந்துள்ளது. விரைவில் ஒரு லட்சம் டாலரை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில் பிட்காயினின் மதிப்பு வெறும் 5,000 அமெரிக்க டாலராக இருந்தது.
வாரத்தின் இறுதி நாளான இன்று பங்குச்சந்தைகள் 2% உயர்வுடன் முடிவடைந்துள்ளன. அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றம் சுமத்திய லஞ்சப்புகாரால் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சரிவை சந்தித்தன. இன்று காலை உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில் 2.39% உயர்வுடன் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,961.32 புள்ளிகள் அதிகரித்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 557.35 புள்ளிகள் உயர்ந்தது. இது கடந்த ஐந்து மாதங்களில் ஒரே நாளில் நிகழ்ந்த அதிகபட்ச உயர்வாகும். நேற்று சுமார் 20 சதவீதம் சரிவை சந்தித்த அதானி குழும பங்குகள் இன்று 2% அளவுக்கு உயர்ந்தன. இருப்பினும் இன்னும் சந்தையில் ஏற்ற, இறக்கம் தொடர்வதாகவும், சந்தை முழுமையாக மீண்டுள்ளதாக கணக்கில் கொள்ள முடியாது என்றும் aநிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், டிசிஎஸ், ஐடிசி உட்பட பல்வேறு சந்தைகள் ஏற்றம் கண்டன. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்குகள் மட்டும் சரிவை…