இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு (FOREX) கடந்த 50 நாட்களில் $47 பில்லியன் குறைந்துள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியா தொடர்ந்து 7-வது வாரமாக அந்நிய செலாவணி கையிருப்பில் சரிவைக் கண்டது. இந்த வாரத்தில் மட்டும் சுமார் 18 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 50 நாட்களில் சுமார் 29 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 17.761 பில்லியன் டாலர் குறைந்து 657.892 பில்லியன் டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தங்க கையிருப்பு குறைகிறது
ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, இந்தியாவின் வெளிநாட்டு நாணயச் சொத்துகள், 569.835 பில்லியன் டாலராக உள்ளன. நாட்டின் தங்க கையிருப்பு $2.068 பில்லியன் குறைந்து $65.746 பில்லியனாக உள்ளது.