Author: Porulaathaaram Post

கின்னஸ் உலக சாதனை தினத்தை கொண்டாடுவதற்காக உலகின் மிக உயரமான பெண்ணான ருமேசா கெல்கியும், குட்டையான பெண்ணான ஜோதி ஆம்கேவும், லண்டனிலுள்ள புகழ்பெற்ற சவோய் ஹோட்டலில் சந்தித்து தேநீர் அருந்தினர். துருக்கியைச் சேர்ந்த 27 வயதான ருமேசாவின் உயரம் 215.16 செமீ (7 அடி 1 அங்குலம்). இந்தியாவை சேர்ந்தவரான ஜோதி மகேவின் உயரம் 62.8 செமீ (2 அடி 1 அங்குலம்). ஜோதியை சந்தித்தது அருமையான தருணம் என்றும், அவரை சந்திக்க நீண்ட நாட்களாக காத்திருந்ததாகவும் ருமேசா கூறினார். உலகின் மிக உயரமான பெண்ணைப் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி என ஜோதி கூறியுள்ளார். வீவர் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படும் அரிய வகை நோயின் காரணமாக ருமேசா அதிக உயரமாக வளர்த்துள்ளார். பெரும்பாலும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் அவரால், வாக்கரைப் பயன்படுத்தி சிறிது நேரம் மட்டும் நிற்க முடியும்.

Read More

மின்சார வாகனங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு உலக வங்கியின் உதவியை நாடவுள்ளது. இது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகள் நாளை தமிழகம் வரவுள்ளனர். ஆட்டோமொபைல் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதால் இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது. தற்போது மின்சார வாகன உற்பத்தியில் அதிக அளவு முதலீடு செய்ய தமிழ்நாடு தயாராக உள்ளது. தற்போது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சார இரு சக்கர வாகனங்களில், 70 சதவீதம் வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியில் முதல் ஐந்து உற்பத்தியாளர்களில், ஓலா எலக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார் மற்றும் ஏதர் எனர்ஜி ஆகியவற்றின் உற்பத்தி ஆலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. நாளை தமிழகம் வரவுள்ள உலக வங்கி அதிகாரிகள், டான்ஜெட்கோ உட்பட பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளனர். தமிழ்நாட்டின் எந்தவொரு திட்டத்திற்கும் உலக வங்கி நிதியளிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. கார்பன் உமிழ்வை குறைக்கும் திட்டங்களுக்கு நிதியளிக்கும் உலக…

Read More

சென்னையிலிருந்து ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கிற்கு கப்பல் வழித்தடத்தை இந்தியா தொடங்கியுள்ளது. இந்தியா – ரஷ்யா இடையேயான கப்பல் போக்குவரத்து தற்போது செங்கடல் வழியே நடைபெறுகிறது. தற்போது இந்த வழித்தடத்தில் ரஷ்யாவை சென்றடைய 48 நாட்கள் ஆகின்றன. பயண நேரம், செலவு ஆகியவை அதிகமாக உள்ளதோடு, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த வழித்தடத்தில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதால், மாற்று வழித்தடம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சென்னை – விளாடிவோஸ்டாக் வழித்தடம் தற்போது சென்னை – விளாடிவோஸ்டாக் கப்பல் வழித்தடத்தை இந்தியா தொடங்கியுள்ளது. மேலும், கிழக்கு துறைமுகங்களான ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவின் பாரதீப்பையும் இந்த வழித்தடத்தில் இணைக்க திட்டமிடப்பட்டுளளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். இந்த வழித்தடத்தை பயன்படுத்துவதால் பயண நேரம் சராசரி வேகத்தில் 10-12 நாட்களாகவும், குறைந்த வேகத்தில் 12-14 நாட்களாகவும் குறைகிறது. ரஷ்யாவில் இருந்து தற்போது பெட்ரோல் மற்றும் திரவ எரிவாயு ஆகியவை இறக்குமதி செய்யப்படுகின்றன.…

Read More

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென வோக்ஹார்ட் நிறுவனர் ஹபில் கோராகிவாலா கோரிக்கை விடுத்துள்ளார். வோக்ஹார்ட் என்பது மும்பையை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமாகும். பயோடெக்னாலஜி துறையின் ஒரு பிரிவான பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலின் ஆதரவுடன் “நஃபித்ரோமைசின்” என்ற ஆன்டிபயாடிக் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து வோக்ஹார்ட் நிறுவனத்தால் “மிக்னாஃப்” என்ற வர்த்தக பெயரில் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. இதன் அறிமுக விழாவில் பேசிய வோக்ஹார்ட் நிறுவனர் ஹபில் கோராகிவாலா, சில மருந்துகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகும், சில மருந்துகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். நோயாளிகளுக்கு மருந்துகள் மலிவு விலையில் விற்பதை உறுதி செய்ய இந்தியாவில் கண்டிபிடிக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், தான் அவருடைய நிலையில் இருந்திருந்தால் இதே கோரிக்கை விடுத்திருப்பேன் என்று கூறினார்.

Read More

2022 ஏலத்தில் 5ஜி ஸ்பெக்ட்ரமை  வாங்கிய அதானியின் நிறுவனம் அதனை திருப்பி ஒப்படைக்கவுள்ளது. 2022 ஜூலையில் நடைபெற்ற 400 மெகா ஹெர்ட்ஸ் ஏலத்தில், அதானி டேட்டா நெட்வொர்க்குகள் 26 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமை ஏலத்திற்கு எடுத்தது. அப்போதுதான் முதன்முறையாக 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 26 ஜிகாஹெர்ட்ஸ் 5ஜி ஸ்பெக்ட்ரமை  வாங்கிய அதானி எண்டர்பிரைசஸின் துணை நிறுவனமான அதானி டேட்டா நெட்வொர்க்குகள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதனை  பயன்படுத்தாத நிலையில், அவற்றை திருப்பி ஒப்படைக்கவுள்ளது. எதற்காக அதனை திருப்பி ஒப்படைக்கவுள்ளது என்பதற்கான காரணம் தெரியவில்லை. ஸ்பெக்ட்ரமை தனது சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தவுள்ளதாக அதானி நிறுவனம் கூறியிருந்தது. இது தொடர்பாக அதானி நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஸ்பெக்ட்ரமை ஏலத்தில் எடுத்த ஓராண்டுக்குள் சேவையை தொடங்கவேண்டும் என்பது ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்களுக்கான விதியாகும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் முதல் 13 வாரங்களுக்கு வாரத்திற்கு ரூ. 1 லட்சமும், அடுத்த 13 வாரங்களுக்கு வாரத்திற்கு…

Read More

பிற சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளை தேசிய பங்குச்சந்தை(NSE)யில் நேரடியாக பட்டியலிடுவதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ளன. பிற சந்தைகளில் இருந்து பட்டியலிடப்படவுள்ள நிறுவனங்களின் குறைந்தபட்ச நிகர மதிப்பை ரூ.10 கோடியிலிருந்து ரூ.75 கோடியாக தேசிய பங்குச்சந்தை உயர்த்தியுள்ளது. இல்லையெனில், தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன், 1,500 கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மூலதனம் வைத்திருக்க வேண்டும் அதேபோல், ஒரு நிறுவனம் ரூ.1,000 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என்றும் என்எஸ்இ கூறியுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரஉள்ளன. குறைந்தபட்ச நிகர மதிப்பு தேவை, குறைந்தபட்ச பொது பங்குதாரர்களின் எண்ணிக்கை தொடர்பான விதிமுறைகளையும் தேசிய பங்குச்சந்தை மாற்றியமைத்துள்ளது. அதேபோல், செலுத்தப்பட்ட மூலதனத்திற்கான விதிமுறை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய விதிமுறைகளின்படி, ஒரு நிறுவனத்திற்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு குறைந்தபட்சம் ரூ.10 கோடி செலுத்தப்பட்ட மூலதனம் இருக்க வேண்டும்.ஆனால், இப்போது, ​​ஒரு நிறுவனம்…

Read More

சீன எஃகு இறக்குமதிக்கு தற்காலிக வரி விதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக JSW குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் கூறியுள்ளார். பெங்களுருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய JSW குழும தலைவர் சஜ்ஜன் ஜிண்டால், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் சீன எஃகு இந்தியாவிற்குள் வருவதைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். சீன எஃகு நாட்டில் அதிக அளவில் இறக்குமதி செய்வதை தடுக்க, தற்காலிக வரி விதிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். சீன எஃகு இறக்குமதியால் இந்திய எஃகு ஆலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் தரவுகளின் படி, கடந்த ஏப்ரல்-அக்டோபர் இடைப்பட்ட மாதங்களில் நாட்டின் எஃகு இறக்குமதியானது, ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.7 மில்லியன் மெட்ரிக் டன்னை எட்டியுள்ளது. தங்களது கோரிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாகவும், அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் சஜ்ஜன்…

Read More

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, தங்கத்தின் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. கடந்த 2 தினங்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 900 ரூபாய் அதிகரித்துள்ளது. பொதுவாகவே தங்கத்தின் விலையை, சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளே இணைந்து தீர்மானிக்கின்றன. எளிதாக சொல்ல வேண்டுமென்றால் சந்தை நிலவரம் வலுவாக இருக்கும்போது தங்கத்தின் விலை குறையும். உலக சந்தைகள் நிலையாக இருந்தால் தங்கத்தின் தேவை மற்றும் அதன் விளைவாக, அதன் விலை குறைகிறது. ஏனெனில் பணவீக்கம் அதிகரிக்கும்போதும், சந்தை நிலவரம் நிலையற்றதாகவும் இருக்கும்போதும் முதலீட்டாளர்கள் தங்கத்தை தேடுவது கணிசமாக அதிகரிக்கும். அதேபோல் அமெரிக்க டாலரின் மதிப்பும் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சமயம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும், உள்நாட்டு தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரூபாயின் மதிப்பு வலுவாக இருக்கும்போது, தங்கத்தின் விலை குறைகிறது. இப்போது தங்கம் வாங்க சரியான நேரமா…

Read More

ஐபிஎல்-லில் டெல்லி அணி தன்னை தக்கவைக்காதது குறித்து ரிஷப் பண்ட் மனம் திறந்துள்ளார். 18-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 2025 மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் வரும் 24, 25 ஆகிய இரு நாட்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க 1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாட்டவர்கள் என மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து விலகிய ரிஷப் பண்ட், தன்னை அந்த அணி தக்கவைக்காததற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் தான் ஏலத்தில் பங்கேற்க பணம் ஒரு காரணம் அல்ல என்றும் கூறியுள்ளார். ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர், சம்பளம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரிஷப் பண்ட் டெல்லி அணியை விட்டு…

Read More

நிலையற்ற தன்மை கொண்டதாக பார்க்கப்பட்ட க்ரிப்டோகரன்சி தற்போது தங்கத்திற்கு மாற்றான முதலீடாக பார்க்கப்படுகிறது. அதிக ஆதரவு மற்றும் வருமானம் இருந்தாலும், பிட் காயினில்  நிலையற்ற தன்மை உள்ளிட்ட சவால்கள் இருந்தன. இருந்தபோதிலும், தற்போது தங்கத்திற்கான மாற்றாக பிட்காயின் பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக, கிரிப்டோகரன்ஸிகள் விவாதத்திற்கு உரியவையாகவே உள்ளன. அதிலும் குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு, மக்களுக்கு கிரிப்டோகரன்ஸிகள் மீதான பார்வை மாறியுள்ளது. ஏனெனில் ட்ரம்ப் கிரிப்டோகரன்சி ஆதரவு நிலைப்பாடு கொண்டவர். அவரது சமீபத்திய கருத்துக்கள் கிரிப்டோகரன்சி மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துகின்றன. பல ஆண்டுகளாக , தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. மேலும், பணவீக்கத்திற்கு எதிராகவும், பொருளாதார நிச்சயமற்ற காலங்களில் பாதுகாப்பான முதலீடாகவும் மதிக்கப்படுகிறது. பிட்காயின் ஆரம்பத்தில் ஏற்ற இறக்கம் கொண்ட சொத்தாகக் காணப்பட்டாலும், அது இப்போது தங்கத்துடன் ஒப்பிடப்படுகிறது. பாதுகாப்பான சொத்தான பார்க்கப்படுகிறது. அமெரிக்க டாலர் போன்ற பாரம்பரிய சொத்துக்களுக்கு மாற்றாக பிட்காயின்…

Read More