தஞ்சையிலுள்ள சுயதொழில் முனைவோருக்கான வழிகாட்டு நிகழ்ச்சியை ஸ்டார்ட்அப்டிஎன் ஏற்பாடு செய்துள்ளது.
ஸ்டார்ட்அப்டிஎன் அமைப்பு தமிழ்நாட்டில் சுயதொழில் முனைவோருக்கு உதவவும், சுயதொழில் முனைவோருக்கு ஏற்ற சூழலை மாநிலத்தில் உருவாக்கவும் செயல்பட்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு வழிகாட்டு நிகழ்ச்சிகள், பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஸ்டார்ட்அப்டிஎன் தஞ்சாவூர் மற்றும் தஞ்சாவூர் வர்த்தகம் மற்றும் தொழில் கழகம் (சிசிஐ தஞ்சாவூர்) ஆகியவற்றுடன் இணைந்து ஞானம் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் வழிகாட்டு நிகழ்ச்சியை நாளை ஏற்பாடு செய்துள்ளது. பல்வேறு துறைகளை சேர்ந்த 13 பேச்சாளர்கள் இதில் பங்கேற்று பேசவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி நாளை (23 நவம்பர் 2024) காலை 9:00 முதல் மாலை 5:00 வரை தஞ்சையிலுள்ள ஞானம் ஆஃப் பிசினஸில் நடைபெறவுள்ளது. சிசிஐ உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் இலவசமாக பங்கேற்கலாம். பிறருக்கு ரூ.500 பதிவுக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.