Author: Porulaathaaram Post

இந்தியா – பிரிட்டன் இடையேயான பொருளாதார உறவுகளை மாற்றியமைக்கக்கூடிய முக்கிய வர்த்தக ஒப்பந்தமான பிரிட்டன் – இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2025-ம் ஆண்டில் தொடக்கத்தில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையேயான உயர்மட்ட சந்திப்பிற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. G-20 உச்சி மாநாட்டின் போது இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். இந்த ஒப்பந்தம் வர்த்தகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வாக்குறுதிகளை கொண்டுள்ளது. 2022 ஜனவரியிலேயே இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கினாலும், இரு நாடுகளிலும் தேர்தல் நடைபெற்றதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இரு பிரதமர்களும் உறுதியாக உள்ளதால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தம் முடிவடையும் என்ற நம்பிக்கை உள்ளது. 2023-24 நிலவரப்படி, இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் 21.34 பில்லியன் டாலரை எட்டியது. இது…

Read More

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பங்குச்சந்தைக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை மற்றும் கமாடிட்டி வர்த்தகம் நடைபெறாது. இருப்பினும், கமாடிட்டியில் மாலை 5 மணி முதல் இரவு 11:55 மணி வரை (குறிப்பிட்ட சில அக்ரி கமாடிட்டி சந்தை இரவு 09:00 மணி வரை இயங்கும்) வர்த்தகம் மீண்டும் தொடங்கும். கடந்த 7 நாட்களாக வீழ்ச்சி அடைந்து வந்த பங்குச்சந்தை, இன்றைய வர்த்தக நேர முடிவில் சிறிது ஏற்றத்தோடு முடிவடைந்தது. இதனால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். நவம்பர் மாதத்தில் 3-வது நாளாக வர்த்தக நாளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளி, குருநானக் ஜெயந்தியை ஒட்டி, இரு தினங்கள் பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தீபாவளியன்று சிறப்பு நேரமாக ஒரு மணி நேரம் மட்டும் பங்குச்சந்தை இயங்கியது. இதன் பிறகு டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படும். இது 2024ம் ஆண்டின் இறுதி விடுமுறை…

Read More

18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர்களுக்கும், நியூசிலாந்தின் பூர்வகுடிகளான மவோரி மக்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. அப்போது நுற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, போர் நிறுத்தத்திற்காக உடன்படிக்கை கொண்டுவரப்பட்டது. பிரிட்டன் அரசுக்கும், நியூசிலாந்தின் பூர்வகுடி மக்களான மவோரி மக்களுக்கும் இடையே 184 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட இந்த உடன்படிக்கையில் சில திருத்தங்களை கொண்டுவர ஆளும்கட்சி அண்மையில் மசோதா இயற்றியது. இதற்கு அவையில் எதிர்ப்பு தெரிவித்த மவோரி இன எம்.பி. ஹானா ரவ்ஹிதி தங்களது பாரம்பரிய நடனமான ஹக்காவை அரங்கேற்றியதுடன் மசோதா நகலை கிழித்தெறிந்தார். இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மவோரி இன மக்கள், வெலிங்டன் நகரில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பாரம்பரிய முறைப்படி இறகுகள் மற்றும் தழைகளால் ஆன உடைகளை அணிந்தபடி அவர்கள் தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடியபடி சென்றனர். இது தங்களது உரிமையை பறிக்கும் முயற்சி என மவோரி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த…

Read More

கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்க வேண்டுமென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் கூறியதைத் தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அதே கருத்தை முன் மொழிந்துள்ளார். எஸ்பிஐ-யின் 11-வது வங்கிகள் மற்றும் பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழில் வளர்ச்சி குறித்து நாம் ஆலோசிக்கும்போது வங்கி வட்டி விகிதங்கள் குறைவாக இருக்க வேண்டுமென தெரிவித்தார். மேலும் பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகளை நிராகரித்த அவர், சர்வதேச நிலவரங்களை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறினார். இந்தியாவின் பொருளாதாரம் வலிமையுடன் இருப்பதாக கூறிய அவர், உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான உறுதியுடன் இந்தியா செயல்பட்டு வருவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Read More

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலத்தை மத்திய அரசு இரண்டாவது முறையாக நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு நியமிக்கப்படும் பட்சத்தில் 1960-க்கு பிறகு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். சக்தி காந்த தாஸ் கடந்த 2018-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்காலம் வரும் டிசம்பர் 10-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதற்கு முன்னதாக, 1949-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை பெனகல் ராமா ராவ் சுமார் ஏழரை ஆண்டுகள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி வகித்தார். இம்முறையும் சக்தி காந்த தாஸின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டால், பெனகல் ராமா ராவை விட அதிக காலம் பதவி வகித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். சக்தி காந்த தாஸின் பதவிக்காலம் குறைந்தது இன்னும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படலாம்…

Read More

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓஎன்ஜிசி க்ரீன் லிமிடெட் நிறுவனமும், என்டிபிசி நிறுவனத்தின் துணை நிறுவனமான என்டிபிசி க்ரீன் நிறுவனமும் கூட்டு நிறுவனமாக இணைந்து ஓஎன்ஜிசி என்டிபிசி க்ரீன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் செயல்படவுள்ளது. இதில் இரு நிறுவனங்களும் சரிபாதி பங்களிப்பை வழங்குகின்றன. இந்த நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து ஆராய்ந்து அது தொடர்பாக வணிகத்தில் ஈடுபடும். மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மட்டுமல்லாது கடல்காற்றின் மூலம் ஆற்றல் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறையும் இந்நிறுவனம் ஆராயும். கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஆய்வு மேற்கொள்ளும். விதிகளுக்கு உட்பட்டு, இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சொத்துகளை கையகப்படுத்தும் பணியையும் இந்நிறுவனம் செய்யும். இந்த கூட்டு நிறுவன முயற்சிக்கு மத்திய அரசு 19.08.2024 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், என்டிபிசி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவான என்டிபிசி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் ஐபிஓ நாளை தொடங்கவுள்ளது.…

Read More

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. அமெரிக்காவின் அடுத்த அதிபராக ட்ரம்ப் பதவியேற்கவுள்ளார். உலக பொருளாதாரம் அமெரிக்க பொருளாரத்தை மையப்படுத்தி இயங்குவதில் மாற்று கருத்தில்லை. தற்போது, ட்ரம்ப் நிர்வாகம் பொருளாதாரத்தில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரும் என்பதே முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த ஆட்சியை போன்றே ட்ரம்ப் இந்த முறையும் பல்வேறு அதிரடியான மாற்றங்களை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்பதே ட் ரம்ப்பின் பிரதான முழக்கம். பொருளாதாரத்தில் அவர் கொண்டு வரவுள்ள மாற்றங்களும் இதனை மையப்படுத்தியே இருக்கும் என்பதே முதலீட்டாளர்களின் கருத்து. மற்றொரு பக்கம், ட் ரப்பின் நிர்வாகம் அமெரிக்கர்களுக்கு சாதகமாக இருந்தாலும், பிறநாட்டவர்களுக்கு பாதகங்கள் இருக்கும் எனவும் முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். இனி வரும் காலங்களில் அமெரிக்காவின் நிதிப்பற்றாக்குறையும், கடனும் கணிசமாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஈடு செய்ய அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி குறைப்பு செய்ய தாமதாகும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.…

Read More

கௌதம் அதானியின் நிறுவனங்களில் ஒன்றான அம்புஜா சிமெண்ட்ஸ், ஓரியண்ட் சிமெண்ட் லிமிடெட் (OCL) நிறுவனத்தை ரூ.8,100 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பின், அம்புஜா சிமெண்ட்ஸ், ஓரியண்ட் சிமெண்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் பங்குகளும் பங்குச் சந்தையில் உயர்வை சந்தித்தன. அம்புஜா சிமெண்ட்ஸின் பங்குகள் 1.49% உயர்ந்தன. ஓரியண்ட் சிமெண்ட்ஸின் பங்குகள் 1.65% லாபம் அடைந்தன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, SAST விதிமுறைகளுக்கு இணங்க, ஓரியண்ட் சிமெண்ட்டில் ஒரு பங்கிற்கு ₹395.40 என்ற விலையில் கூடுதலாக 26% பங்குகளை அம்புஜா சிமெண்ட்ஸ் வாங்கவுள்ளது. இந்த ஒப்பந்தம் மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கையகப்படுத்தலின் மூலம் அல்ட்ரா டெக் நிறுவனத்திற்கு அடுத்ததாக, நாட்டின் 2-வது பெரிய சிமெண்ட் நிறுவனமாக அம்புஜா சிமெண்ட்ஸ் உருவெடுத்துள்ளது. இந்த கையகப்படுத்தலின் மூலம் 2028-ம் ஆண்டுக்குள் 140 MTPA என்ற இலக்கை நோக்கி செல்ல உதவும் என…

Read More