கின்னஸ் உலக சாதனை தினத்தை கொண்டாடுவதற்காக உலகின் மிக உயரமான பெண்ணான ருமேசா கெல்கியும், குட்டையான பெண்ணான ஜோதி ஆம்கேவும், லண்டனிலுள்ள புகழ்பெற்ற சவோய் ஹோட்டலில் சந்தித்து தேநீர் அருந்தினர்.
துருக்கியைச் சேர்ந்த 27 வயதான ருமேசாவின் உயரம் 215.16 செமீ (7 அடி 1 அங்குலம்). இந்தியாவை சேர்ந்தவரான ஜோதி மகேவின் உயரம் 62.8 செமீ (2 அடி 1 அங்குலம்). ஜோதியை சந்தித்தது அருமையான தருணம் என்றும், அவரை சந்திக்க நீண்ட நாட்களாக காத்திருந்ததாகவும் ருமேசா கூறினார். உலகின் மிக உயரமான பெண்ணைப் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி என ஜோதி கூறியுள்ளார்.
வீவர் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படும் அரிய வகை நோயின் காரணமாக ருமேசா அதிக உயரமாக வளர்த்துள்ளார். பெரும்பாலும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் அவரால், வாக்கரைப் பயன்படுத்தி சிறிது நேரம் மட்டும் நிற்க முடியும்.