மொபைல் முதல் மடிக்கணினிகள் வரையிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உதிரி பாகங்களை உள்நாட்டில் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்தியா ரூ.500 கோடி வரை ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள், சாம்சங் போன்ற சர்வதேச நிறுவனங்களின் மொபைல் உற்பத்தி காரணமாக இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கடந்த ஆறு ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்து 2024-ம் ஆண்டில் 115 பில்லியன் டாலராக உள்ளது. இது இப்போது உலகின் நான்காவது பெரிய ஸ்மார்ட் போன் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது.
ஆனால், உதிரி பாகங்களுக்காக சீனாவை நம்பியிருக்கும் சூழல் உள்ளது இதனைத்தொடர்ந்து, எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்களுக்கான உள்நாட்டு விநியோக சங்கிலியை மேம்படுத்த, நிறுவங்களுக்கு ரூ.500 கோடி வரை ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி, தகுதியான சர்வதேச மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.