பாதுகாப்புத்துறை மற்றும் கப்பல் கட்டும் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தை கண்டுள்ளன.
இன்றைய தொடங்கியபோதே பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீதமும், பாரத் எலக்ட்ரானிஸ் நிறுவன பங்குகள் 2 சதவீதமும், எச்ஏஎல் பங்குகள் இரண்டு சதவீதமும் ஏற்றம் கண்டன. கப்பல் கட்டும் நிறுவனங்களான ஜிஆர்எஸ்இ, கொச்சின் ஷிப்யார்ட், மசாகன் டாக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3-5% வரை லாபம் கண்டுள்ளன.
MTAR டெக், DCX இந்தியா போன்ற பங்குகள் கடந்த 30 நாட்களில் 10 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளன. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்கு தற்போது ரூ.307-க்கு வர்த்தகமாகி வருகிறது. அதன் விலை ரூ.340 வரை உயரும் என ஜேபி மோர்கன் இலக்கு நிர்ணயித்துள்ளது. விண்வெளி துறை சார்ந்த பங்குகளை விரும்பும் முதலீட்டாளர்களின் தேர்வாக பாரத் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளது.
அதேபோல், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவன பங்குகள் ரூ.4486 ரூபாய்க்கு வர்த்தகமாகி வரும் நிலையில், ரூ.5,135 வரை உயரும் என ஜேபி மோர்கன் இலக்கு நிர்ணயித்துள்ளது.
பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு தயாரிப்பை இந்தியா ஊக்குவித்து வருவதே இந்த உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது. அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீட்டை ரூ.6.22 லட்சம் கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
கப்பல் மட்டும் நிறுவனமான GRSE, வரும் மார்ச் மாதத்திற்குள் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிற்கு ஆர்டர்கள் கிடைக்குமென எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிதியாண்டில், இன்னும் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.