வங்கிகளில் அதிக மதிப்பு கொண்ட வைப்புதொகையின் பங்கு கணிசமாக உயர்ந்துள்ளது.
வங்கிகளில் நிலையான வைப்பு, தொடர் வைப்பு உள்பட பல்வேறு வைப்பு திட்டங்கள் உள்ளன. ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் இடையிலான காலாண்டில், அதிக மதிப்பு கொண்ட வைப்பு தொகையின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் இருந்த 54.7 சதவீதத்திலிருந்து 68.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
டெபாசிட்களை திரட்டுவதில் பொதுத்துறை வங்கிகளை விட தனியார் வங்கிகள் முன்னிலையில் உள்ளன. அதே சமயம், கடன் வழங்குவதில் பொதுத்துறை வங்கிகள் முன்னிலையில் உள்ளன.
7 சதவீதத்துக்கும் அதிகமான வட்டி விகிதத்தைக் கொண்ட வைப்புத்தொகை, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 68.8 சதவீதமாக உள்ளது. இந்த மதிப்பு கடந்த ஆண்டு இதே காலத்தில் 54.7 சதவீதமாக இருந்தது.
பல்வேறு வைப்புத்தொகை திட்டங்களில், டெர்ம் டெபாசிட்களை பொதுமக்கள் அதிக அளவில் தேர்வு செய்துள்ளனர். மொத்த வைப்புத்தொகையில் டெர்ம் டெபாசிட்களின் மதிப்பு 61.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.