இந்திய மருந்து உற்பத்தித்துறையானது அதன் தற்போதைய சந்தை மதிப்பான $55 பில்லியனில் இருந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 58 சதவீதம் வளர்ச்சி கண்டு $130 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கிறது.
அதிகரித்து வரும் ஏற்றுமதி, புதிய தொழில்நுட்பம் போன்றவற்றின் காரணமாக இந்த வளர்ச்சி எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மருந்து நிறுவனங்கள் தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு, சர்வதேச ஆராய்ச்சியிலும் பங்கேற்று வருகின்ன்றன. இந்தியாவின் மருந்து ஏற்றுமதி தற்போது $27.85 பில்லியனை எட்டியுள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் $1 டிரில்லியன் டாலர் ஏற்றுமதியை இந்திய மருத்துத்துறை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருந்து உற்பத்தியில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தையும், மதிப்பின் அடிப்படையில் 14வது இடத்தையும் பெற்றுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 சதவீதம் ஆகும்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை விட இந்தியாவில் உற்பத்தி செலவு 30-35 சதவீதம் குறைவு ஆகும். மேலும், இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான செலவு 87 சதவீதம் குறைவு ஆகும்.