மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறகுகள் என்ற சிறப்புக்கடன் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மாற்றுப்பாலினத்தவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை நிதிச் சேவைகளைப் பெறுவதில் அதிக சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில், பொருளாதார ரீதியான அவர்களின் தேவைகளை உறுதி செய்யும் ‘சிறகுகள்’ சிறப்புக்கடன் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள்
- 5% என்ற அளவிற்கு குறைந்த வட்டியே வசூலிக்கப்படுகிறது
- சுயதொழில் மற்றும் சிறுவணிகம் போன்ற தேவைகளுக்கு கடன். எளிய நடைமுறைகள்.
- தனிநபருக்கும், சுயஉதவிக் குழுக்களுக்கும் கடன்
- கடனை அடைத்த பிறகு மறுநாளே மீண்டும் கடன் பெறலாம்.
கடனளவு
குறைந்த பட்சம் ரூ.5.000 முதல் அதிகபட்சம் ரூ.1,00,000 வரை. அதிகபட்சம் 36 மாத தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம்
கடன் வழங்கும் நிறுவனங்கள்
மாநிலத்தின் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் இக்கடன் வழங்கப்படும்.
தகுதி
- மாற்றுப் பாலினத்தவராக இருத்தல் வேண்டும்.
- வங்கிக்கிளை செயல்படும் பகுதியில் சுயதொழில் அல்லது சிறுவணிகம் செய்பவர்கள் மற்றும் செய்ய முன் வருபவர்கள்
- குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 70 வயதுவரை (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் உட்பட).
- இரு தனி நபர் பிணையம் அளித்தல் வேண்டும்.
- இந்திய ரிசர்வ் வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட KYC ஆவணங்கள்.
- சமூக நலத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை.
எய்தும் நன்மைகள்
- குறைந்த வட்டியில் கடனுதவி.
- கந்து வட்டிக்காரர்களின் பிடியிலிருந்து விடுதலை.
- சொந்தக்காலில் நிற்பதற்கான தன்னம்பிக்கை. பொருளாதார தற்சார்பு.
- சமூக அங்கீகாரம்.