கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுமென ட்ரம்ப் அறிவித்துள்ளதால், ஆடி, பிஎம்டபிள்யு, ஃபாக்ஸ்கான் உள்பட பல நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்திக்கவுள்ளன.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் குறித்த கவலைகளை மேற்கோள் காட்டி, தான் பதவியேற்ற முதல் நாளிலேயே மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவில் இருந்து வரும் பொருட்கள் மீது கூடுதல் வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பால் பல நிறுவனங்கள் பாதிக்கப்படவுள்ளன.
ஆடி:
மெக்ஸிகோவில் உள்ள ஆடியின் ஆலை Q5 காரை உற்பத்தி செய்கிறது. 2024-ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் அமெரிக்காவிற்கு 40,000 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.
பிஎம்டபிள்யு:
பிஎம்டபிள்யுவின் மெக்சிகோ ஆலை 3 சீரிஸ், 2 சீரிஸ் கூபே மற்றும் M2 மாடல்களை உற்பத்தி செய்கிறது. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மேலும், மெக்சிகோவில் இயங்கும் கியா, டொயோட்டா, நிசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன.
எலக்ட்ரானிக்ஸ்
லெனோவா: லெனோவா மெக்ஸிகோவின் மான்டேரியில் சர்வர்கள் மற்றும் டேட்டா சென்டர் தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது.
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்: எல்ஜி மெக்சிகோவில் டிவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் EV பாகங்களைத் தயாரிக்கிறது.
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்: சாம்சங் மெக்சிகோவில் தொலைக்காட்சிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை உற்பத்தி செய்து, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது.