Author: Porulaathaaram Post

வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து,  செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் 6.5% ஆக தொடருமென தெரிவித்தார். தொடர்ந்து 11-வது முறையாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை. கடைசியாக 2023 பிப்ரவரியில் ரெப்போ விகிதங்களை 6.5% ஆக  உயர்த்தியது உயர் பணவீக்கம் மற்றும் ஜிடிபி சரிவுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாக வைத்துள்ளதாக சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார்.  வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில் பணவீக்கம் 4% என்ற அளவில் இருப்பதில் கவனம் செலுத்தவும் நிதிக் கொள்கைக் குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கி நிலையான மற்றும் சீரான பாதையில் சென்று…

Read More

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ. 6000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ‘புராஜெக்ட் ஸ்ட்ரெயிட்லைட்’ என்ற பெயரில் இந்தியாவில் ரூ. 6000 கோடியை ஒன்பிளஸ் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் உள்ள ஒன்பிளஸ் நிறுவனம், வணிகத்தை மேலும் வலுப்படுத்தவும்,  வாடிக்கையாளர்களுக்கான சேவையை மேம்படுத்தவும் ஒன்பிளஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.. பொருள்களின் தரம், வாடிக்கையாளர் சேவை மேம்பாடு, இந்திய சந்தைகளுக்கு ஏற்ப அம்சங்களை மேம்படுத்துவது ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாக  ஒன்பிளஸ் நிறுவனம் தெரித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய சந்தைகளில் தங்கள் வணிகத்தை வலுவாக்கவும், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும், ஒன்பிளஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2026-ம் ஆண்டுக்குள் தங்கள் சேவை மையங்களின் எண்ணிக்கையை 50% அதிகரிக்கவும், அதில் 22% இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே எட்டவும் ஒன்பிளஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது.

Read More

ஆப்பிரிக்காவில் மர்மக் காய்ச்சலுக்கு இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர். காங்கோவில் காய்ச்சல் அறிகுறிகளுடன் கூடிய நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 20 நாட்களில் 300-க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மர்ம நோய் காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசப் பிரச்சினை மற்றும் இரத்த சோகை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறந்தவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், மர்ம காய்ச்சல் தொடர்பாக மக்கள்  விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவவும், மக்கள் கூடுவதை தவிர்க்கவும், இறந்தவர்களின் உடல்களை தொடுவதை தவிர்க்கவும் மக்களை வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் குழு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், 809.53 புள்ளிகள் உயர்ந்து 81,765.86 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 240.95 புள்ளிகள் உயர்ந்து 24,708.40 புள்ளிகளாகவும் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டில் உள்ள டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட ஐடி நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிவடைந்தன. என்டிபிசி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்டவை சரிவை சந்தித்தன. இன்போசிஸ் , டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன பங்குகள் தலா 3 சதவீதம் உயர்ந்தன. ஐசிஐசிஐ வங்கி,  பார்தி ஏர்டெல் ஆகியவை தலா 1.9 சதவீதம் வரை உயர்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் உள்ள டாப் 50 பங்குகளில் 46 பங்குகள் ஏற்றத்திலும், 4 பங்குகள் சரிந்தும் வர்த்தகமாகின. துறை ரீதியாக நிஃப்டி ஐடி 2 சதவிகிதம் உயர்ந்து முதலிடத்தில் உள்ளது. நிஃப்டி பொதுத்துறை வங்கி தலா 0.1 % சரிந்தது முடிந்தது. டாலருக்கு நிகரான இந்திய…

Read More

கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுமென ட்ரம்ப் அறிவித்துள்ளதால், ஆடி, பிஎம்டபிள்யு, ஃபாக்ஸ்கான் உள்பட பல நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்திக்கவுள்ளன. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் குறித்த கவலைகளை மேற்கோள் காட்டி, தான் பதவியேற்ற முதல் நாளிலேயே மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவில் இருந்து வரும் பொருட்கள் மீது  கூடுதல் வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார். ட்ரம்பின் இந்த அறிவிப்பால் பல நிறுவனங்கள் பாதிக்கப்படவுள்ளன. ஆடி: மெக்ஸிகோவில் உள்ள ஆடியின் ஆலை Q5 காரை உற்பத்தி செய்கிறது. 2024-ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் அமெரிக்காவிற்கு 40,000 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. பிஎம்டபிள்யு: பிஎம்டபிள்யுவின் மெக்சிகோ ஆலை 3 சீரிஸ், 2 சீரிஸ் கூபே மற்றும் M2 மாடல்களை உற்பத்தி செய்கிறது. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும், மெக்சிகோவில் இயங்கும் கியா,…

Read More

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2025 ஜனவரி 1 முதல் அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. உற்பத்தி செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்ததன் காரணமாக விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உயர்ந்து வரும் செலவுகளை கட்டுப்படுத்தி முடிந்தவரை வாடிக்கையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் பார்த்துக்கொள்வதே தங்களது நோக்கம் என ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், உற்பத்தி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனை ஈடுகட்ட சிறிய அளவில் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டதென ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. விலைகள் எவ்வளவு உயரும்? 2025-ம் ஆண்டு வெளியான அனைத்து மாடல்களிலும் ரூ.25,000 வரை விலை உயர்த்தப்படும் என்று ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, டஸ்கான் மற்றும் i30 செடான் போன்றவற்றின் விலை உயரும். நவம்பர் மாதத்தில் ஹூண்டாய் கார்களின் உள்நாட்டு விற்பனை 48,246 ஆகவும், ஏற்றுமதி 13,006 ஆகவும்…

Read More

சர்வதேச சந்தையில் ஒரு பிட்காயின் விலை ஒரு லட்சம் அமெரிக்க டாலரை தாண்டிவிட்டது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.84.72 லட்சம் ஆகும். இந்த ஆண்டில் மட்டும் பிட்காயினின் மதிப்பு 2 மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் 45% உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வென்றது கிரிப்டோகரன்சி சந்தையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் தனது பிரச்சாரத்தின்போது டிஜிட்டல் சொத்துக்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்ததோடு, அமெரிக்காவின் பிட்காயின் கையிருப்பைக் அதிகவும் உறுதியளித்தார். கிரிப்டோகரன்சி தோன்றி 16 ஆண்டுகளுக்கு மேலாக, பிட்காயின் குறித்த பல்வேறு சர்ச்சை வரலாறு இருந்தபோதிலும், பிரதானமான குதலீட்டாளர்கள் இதனை ஏற்றுக்கொண்டதையே இந்த விலை உயர்வு எடுத்துக்காட்டுகிறது. பெரிய முதலீட்டாளர்கள் முதல் சில்லறை முதலீட்டாளர்கள் வரை பலரும் பிட்காயினில் நேரடியாக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். தற்போது, பிட்காயினின் மதிப்பு 100,000 டாலருக்கு மேல் உயர்ந்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் சந்தை மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து…

Read More

ஆசியாவில் மிகச்சிறந்த நாணயங்களில் இந்தியா ரூபாயும் இடம் பெற்றுள்ளதாக மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு  எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், மத்திய கிழக்கு நாடுகளின் நெருக்கடி, சர்வதேச சவால்களுக்கு இடையிலும் ஆசிய அளவில் சிறந்த  நாணயங்களில் ஒன்றாக இந்தியா ரூபாய் உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்டார். ஆசிய அளவில் ரூபாயின் செயல்பாடு வலிமையாக இருப்பது இந்தியாவின் வலுவான பொருளாதார அடிப்படையை காட்டுவதாகவும் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நவம்பர் 19 நிலவரப்படி 1.4 சதவீதம் சரிவை சந்தித்தது. அதேசமயம், ஜப்பானின் யென் 8.8 சதவீதமும், தென் கொரியாவின் வோன் 7.5 சதவீதமும் சரிவடைந்துள்ளன.  பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் வலுவாக உள்ளதாகவும், இது இந்தியாவின் நிலையான பொருளாதாரத்திற்கு சான்றாக அமைந்துள்ளதாகவும், பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். அதேபோல், பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் குறித்து மத்திய அரசுக்கு எந்த யோசனையும்…

Read More

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வரி விதித்தது இந்தியாவுக்கு சாதகமானது என நிதி ஆயோக்  தெரிவித்துள்ளது.. டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி, இந்த வரி விதிப்பு குறுகிய காலத்தில் உலகளாவிய வர்த்தகத்திற்கு அதிர்ச்சியாக அளித்தாலும், சர்வதேச விநியோகச் சங்கிலிகளில் இந்தியா தனது பங்கை அதிகரிக்க வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்தார். அமெரிக்க அதிபராக தான் பதவியேற்ற முதல் நாளில் சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது வரிகளை விதிக்கப் போவதாகக் ட்ரம்ப் கூறியுள்ளார். ஆனால் அவர் இந்தியாவைக் குறிப்பிடவில்லை. இந்த வரி உயர்வால் தெற்காசிய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30 அடிப்படை புள்ளிகள் குறையும் என்று மோர்கன் ஸ்டான்லி அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த வரி உயர்வு வர்த்தக திசை திருப்பலுக்கு வழிவகுக்கும் என்றும், அதன் விளைவுகள் அடுத்த சில மாதங்களில் தெரிய வருமென நிதி…

Read More

ஊழியர்களின் வேலை நேரத்தைக் கட்டுப்படுத்தவும், பணி நேரம் சரியாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் காங்கிரஸ் எம்பி சசி தரூர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தில் பேசிய சசி தரூர், நீண்ட நேரம் வேலை செய்வது ஊழியர்களை மனச்சோர்வு, பதற்றம், மனநலப் பிரச்சினைகள்,  உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்குள் தள்ளியுள்ளது என்று  கூறினார். வேலை நேரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவும், அவை  பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் சசி தரூர் வலியுறுத்தினார். வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தேவை என்றும்  கூறினார்.  எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தை சேர்ந்த பட்டயக் கணக்காளரான அன்னா செபாஸ்டியன் பேராயில் பணிச்சுமை காரணமாக அண்மையில் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி சசி தரூர் பேசினார். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் இளைஞர்களின் நலனை பாதுகாப்பதில் நாம் தோல்வி அடைந்துள்ளதாவும் அவர் கூறினார். இந்திய…

Read More