அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வரி விதித்தது இந்தியாவுக்கு சாதகமானது என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது..
டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி, இந்த வரி விதிப்பு குறுகிய காலத்தில் உலகளாவிய வர்த்தகத்திற்கு அதிர்ச்சியாக அளித்தாலும், சர்வதேச விநியோகச் சங்கிலிகளில் இந்தியா தனது பங்கை அதிகரிக்க வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக தான் பதவியேற்ற முதல் நாளில் சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது வரிகளை விதிக்கப் போவதாகக் ட்ரம்ப் கூறியுள்ளார். ஆனால் அவர் இந்தியாவைக் குறிப்பிடவில்லை. இந்த வரி உயர்வால் தெற்காசிய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30 அடிப்படை புள்ளிகள் குறையும் என்று மோர்கன் ஸ்டான்லி அறிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த வரி உயர்வு வர்த்தக திசை திருப்பலுக்கு வழிவகுக்கும் என்றும், அதன் விளைவுகள் அடுத்த சில மாதங்களில் தெரிய வருமென நிதி ஆயோக் தலைமை அதிகாரி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.