இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், 809.53 புள்ளிகள் உயர்ந்து 81,765.86 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 240.95 புள்ளிகள் உயர்ந்து 24,708.40 புள்ளிகளாகவும் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டில் உள்ள டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட ஐடி நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிவடைந்தன. என்டிபிசி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்டவை சரிவை சந்தித்தன. இன்போசிஸ் , டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன பங்குகள் தலா 3 சதவீதம் உயர்ந்தன. ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல் ஆகியவை தலா 1.9 சதவீதம் வரை உயர்ந்தன.
தேசிய பங்குச் சந்தையில் உள்ள டாப் 50 பங்குகளில் 46 பங்குகள் ஏற்றத்திலும், 4 பங்குகள் சரிந்தும் வர்த்தகமாகின. துறை ரீதியாக நிஃப்டி ஐடி 2 சதவிகிதம் உயர்ந்து முதலிடத்தில் உள்ளது. நிஃப்டி பொதுத்துறை வங்கி தலா 0.1 % சரிந்தது முடிந்தது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 84.72 ரூபாயாக உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 84.75 ரூபாய்க்கு சரிந்த நிலையில் 84.72 ரூபாயில் முடிவடைந்தது.