தூத்துக்குடி புனித மேரி மகளிர் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில், மாணவிகளின் தொழில்முகக் கல்வி, திறன்கள் மேம்பாடு மற்றும் எதிர்கால வேலையொட்டித் தயாரிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தும் நோக்குடன், Littoral Familiarisation Program மே 19 மற்றும் 20ம் தேதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, மே 27ம் தேதி மேலும் ஒரு அமர்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், இன்றைய வேகமாக மாற்றம் காணும் தொழில்நுட்ப உலகில் அதிக தேவைகலுடன் வளர்ந்து வரும் துறைகளில், மாணவிகள் தேவையான அறிவும், செயல்முறையிலும் திறமையும் பெற்றுத் தயாராகிக் கொள்வதற்கான வழிகாட்டலாகும். லிட்டோரல் அகாடமி, பின்வரும் பாடநெறிகளை மாணவிகளுக்காக வழங்க உள்ளது: – UPSC தேர்விற்கான தயாரிப்பு – ஜெர்மன் மற்றும் ஜப்பானிய மொழிக் கற்பித்தல – CA Foundation பயிற்சி – செயற்கை நுண்ணறிவு (AI) – டிஜிட்டல் மற்றும் எதிர்கால ஊடகத் தளங்கள் – ட்ரோன் தொழில்நுட்பம் இந்தப் பாடநெறிகள் அனைத்தும் கல்லூரி வளாகத்திலேயே…
Author: Porulaathaaram Post
உலகம் முழுவதும் “உலக மூழ்குதல் தடுப்பு நாள் 2025”-ஐ அனுசரிக்கத் தயாராகும் இந்த வேளையில், மரைன் கல்வி மற்றும் சமூக சேவையில் முன்னோடியாக விளங்கும் லிட்டோறல் அகாடமி, இந்த விழிப்புணர்வு நிகழ்வை ஜூலை 25, 2025 அன்று சென்னை மெரினா கடற்கரையில் நடத்துகிறது. இந்த ஆண்டின் நிகழ்வு ஒரு முக்கியமான உண்மையை வலியுறுத்துகிறது: மூழ்குதல் என்பது ஒரு விபத்து மட்டும் அல்ல—அது தடுக்கக்கூடியது. இந்தியாவில் மூழ்கி உயிரிழப்பதற்கான விபத்துத் தரவுகள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் மூழ்கி உயிரிழப்பதற்கான சம்பவங்கள் பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே, இது முன்னிலை வகிக்கும் விபத்து காரணமாக இருக்கிறது. தமிழ்நாட்டில், கடற்கரை பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் அதிகமாக இருப்பதால், குறிப்பாக மழைக்காலம் மற்றும் விடுமுறை நாட்களில், மூழ்கி உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. தேசிய குற்றப்பிரிவு தகவலின் படி, இந்தியாவில் வருடத்துக்கு 8,000-க்கும் மேற்பட்ட பேர் மூழ்கி உயிரிழக்கின்றனர். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள…
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் தனது கொள்கை வட்டி விகிதத்தில் குறைந்த அளவிலான தளர்வை அறிவித்துள்ளது. இது இந்தியா பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உந்துதலாக அமையும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். நுகர்வோர் விலை அதிகரிப்பில் (CPI) தற்போது வீழ்ச்சி காணப்படுவதால், வட்டி விகிதத்தை குறைப்பதற்கு இடமளிக்கிறது என ஆளுநர் சங்கர் சிங் அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனினும், இது தொடர்ச்சியான வட்டித் தளர்வுகளுக்கான துவக்கமல்ல எனவும், முன்னெச்சரிக்கையாகவே செயல்படப்போவதாகவும் ஆளுநர் தெரிவித்தார். உலக சந்தைகளின் நிலைமை, நெருக்கடியான எண்ணெய் விலைகள் மற்றும் ரூபாயின் நிலைமாற்றங்கள் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டியதாயுள்ளது. எனவே, RBI இப்போது வளர்ச்சிக்கேதான முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், எதிர்கால முடிவுகள் சூழ்நிலையை பொருத்தே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரியதர்ஷினி.ஆ
பெண்களிடையே நிதியறிவு மற்றும் காப்பீட்டு விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக எல்ஐசி புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பீமா சகி யோஜனா என்ற இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநிலம் பானிபட்டில் தொடங்கி வைத்தார். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.ஐ.சி) ‘பீமா சகி திட்டம்’ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-70 வயதுடைய பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நிதியறிவு மற்றும் காப்பீட்டு விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு, அவர்கள் எல்.ஐ.சி முகவர்களாக பணியாற்ற முடியும். மேலும் பட்டதாரி பெண்கள் எல்.ஐ.சியில் மேம்பாட்டு அதிகாரியாக இருக்க பரிசீலிக்க தகுதி பெறுவார். முதல் ஆண்டு முழுவதும் இந்த திட்டத்தின்கீழ் முகவர்களாக பணியாற்றுபவர்களுக்கு மாதம் ரூ.7,000 வழங்கப்படுகிறது. அடுத்தாண்டு மாத சம்பளம் ரூ.6,000 ஆக குறைக்கப்படும் எனவும், அதற்கு அடுத்து மூன்றாமாண்டில் மாதம் ரூ.5,000 ஆகவும் குறைக்கப்படும். எனினும், வழக்கமான ஊழியர்…
வாரத்தின் முதல் வணிக நாளான இன்று பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான செக்செக்ஸ் 200.66 புள்ளிகள் சரிந்து 81,508.46 புள்ளிகளாக நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.25% சரிவாகும். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 58.80 புள்ளிகள் சரிந்து 24,619 புள்ளிகளாக நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் 0.24% சரிவாகும். மும்பை பங்குச்சந்தை பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 14 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. எஞ்சிய 16 நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன. எனினும் அதிகபட்சமாக எல்&டி பங்குகள் 2.09% உயர்ந்திருந்தன. ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ் நிறுவனப் பங்குகள் -3.35% சரிந்தன. தேசிய பங்குச்சந்தை பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் விப்ரோ, எல்&டி, டாடா ஸ்டீல், பிபிசிஎல், எச்டிஎஃப்சி லைஃப், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்திருந்தன. பொதுத் துறை வங்கிகள், வாகனங்கள், எனர்ஜி துறைகள் 0.5% வரை சரிந்திருந்தன. கடந்த…
பிளாஸ்டிக் அச்சுறுத்தலுக்கு மாற்றாக கடலில் கரையும் பிளாஸ்டிக்கை ஜப்பானை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் நீண்ட கால பிரச்சினைகளில் ஒன்றாகும். இதற்கு தீர்வு கண்டறியும் வகையில் ஜப்பானை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடலில் கரையும் பிளாஸ்டிக்கை வடிவமைத்துள்ளனர். இந்த பிளாஸ்டிக்கை பேக்கிங், மருத்துவ சாதனங்கள் உள்பட பல்வேறு செயல்பாடுகளுக்காக பயன்படுத்தலாம். சாதாரண பிளாஸ்டிக்குகள் மக்குவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகும். இந்த பிளாஸ்டிக் கடல் நீரில் சில மணிநேரங்களில் கரைந்து, நீண்ட கால சுற்றுச்சூழல் மாசுபாட்டை நீக்குகிறது. இந்த பிளாஸ்டிக் மண்ணில் மக்க 10 நாட்கள் ஆகின்றது. மக்கியதும் மண்ணின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வளப்படுத்துகிறது. இந்த மக்கும் பிளாஸ்டிக்கின் மிக முக்கியமான நன்மை என்னவென்றால் மக்கும்போது கார்பன் டை ஆக்சைடை வெளியிடாது. மேலும், இதனை எளிதாக எளிதில் மறுசுழற்சி செய்யலாம்
இணைய விற்பனை தளங்களான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் மீதான விசாரணைக்கு எதிரான மனுக்களை விசாரிக்குமாறு, இந்திய போட்டி ஆணையமான(சிசிஐ) உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தங்கள் இணையதளங்களில் குறிப்பிட்ட விற்பனையாளர்களுக்கு ஆதரவாக, இந்திய சட்டங்களை மீறியதாக இந்திய போட்டி ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. குறிப்பாக, சாம்சங் மற்றும் விவோ போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளை ஆன்லைனில் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்த சட்டங்களை மீறி அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இதனை எதிர்த்து அந்நிறுவனங்கள் சார்பில் ஐந்து உயர் நீதிமன்றங்கள் உட்பட நாடு முழுவதும் கிட்டத்தட்ட 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையை சீர்குலைக்கவே பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய போட்டி ஆணையம் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. விசாரணையை விரைவாக முடிக்க, அதற்கு தடையாக உள்ள மனுக்களை விரைவாக விசாரிக்க வேண்டுமெனவும் இந்திய போட்டி…
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. தற்போதைய ஆளுநர் சக்திகாந்த தாஸ் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி பதவியேற்றார். அவரது மூன்று ஆண்டு கால பதவிக்காலம் நிறைவடைந்தபோது, அவரது பணிக்காலத்தை மத்திய அரசு நீட்டித்தது. நாளையுடன் அவரது பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தற்போது மத்திய வருவாய்த்துறை செயலராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. இவர் வரும் 11-ம் தேதி ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ளார். 1990ஆ-ம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் மல்கோத்ரா, ஐஐடி-கான்பூரில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றவர். பிறகு அமெரிக்காவில் உள்ள பல்கலையில் பொதுக் கொள்கைப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். கடந்த 33 ஆண்டு காலத்தில், சஞ்சய் மல்ஹோத்ரா மத்திய அரசின்…
விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய விவசாயப் பொருளாதார நிபுணர்களுடன் மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மதா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு தொகுப்பை அறிவிக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர். இந்தியா முழுவதும் உள்ள விவசாயச் சந்தைகளில் ஒரே மாதிரியான வரிவிதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நிறுவன இணையதளங்களில் விவசாய இயந்திரங்களின் விலைகள் காட்டப்பட வேண்டும், மண்டி உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், அவசர காலங்களில் மட்டுமே குறைந்தபட்ச ஏற்றுமதி விலைகளை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாய சங்க பிரதிநிதிகள் முன்வைத்தனர். மேலும், பூச்சிக்கொல்லிகளின் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து…
அமெரிக்காவில் 100 வயது ஆணும், 102 வயது பெண்ணும் திருமணம் செய்து கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளனர். பெர்னி லிட்மேன்- மார்ஜோரி பிடர்மேன் என்ற இந்த தம்பதி, பிலடெல்பியாவில் உள்ள அவர்களது வீட்டில் கடந்த 3-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். முதியோர் இல்லத்தில் எதேச்சையாக சந்தித்த இவர்கள், தங்களது இளமை பருவத்தில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்ததை அறித்தனர். பெர்னி என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மார்ஜோரி ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இருவரும் குடும்பத்தோடு தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், தங்களின் துணை இறந்த பிறகு பென்சில்வேனியாவுக்கு குடிபெயர்ந்தனர். முதியோர் இல்லத்தில் இருவரும் மீண்டும் சந்தித்த போது காதல் மலர்ந்துள்ளது. இதையறிந்த குடும்பத்தினர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். பெர்னி லிட்மேனின் பேத்தியான சாரா சிசெர்மேன், இருவரும் தங்கள் முதல் திருமணத்தில் அவர்களது துணைகளுடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்த நிலையில், 100 வயதில் மீண்டும்…