டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, உலக வரலாற்றிலேயே பணக்கார தனி நபராக மாறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு டெஸ்லாவின் பங்கு 40 சதவீதம் உயர்ந்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 334.3 பில்லியன் டாலராகும். நேற்று மற்றும் அவரது நிறுவன பங்குகள் 3.8 சதவீதம் உயர்ந்துள்ளன. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத உயர்வு ஆகும்.
அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ட்ரம்ப்பின் நிர்வாகத்தில் வேளாண் மஸ்க்கிற்கு ,உக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. டிரம்ப்புடன் மஸ்க் இணைந்திருப்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
ட்ரம்ப்பின் பிரச்சாரத்திற்கு $100 மில்லியனுக்கும் அதிகமாக எலான் மஸ்க் நன்கொடை வழங்கினார். மேலும், அமெரிக்க நிர்வாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திறன் துறையின் தலைவராகவும் மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார். இது டெஸ்லாவின் தானியங்கி கார் திட்டத்திற்கு பயனளிக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
உலகின் 2-வது பணக்காரராக உள்ள ஆரக்கிள் தலைவர் லாரி எலிசனை விட எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 80 பில்லியன் டாலர்கள் கூடுதலாக உள்ளது.