மும்பை பங்குச்சந்தையான பிஎஸ்இ-யில் இருந்து வரும் டிசம்பர் 23-ம் தேதி முதல் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவன பங்குகள் நீக்கப்படும் என்றும், அதற்கு பதிலாக ஜொமேட்டோ பங்குகள் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக BSE 100, BSE சென்செக்ஸ் 50 மற்றும் BSE சென்செக்ஸ் நெக்ஸ்ட் 50 உட்பட பல முக்கிய குறியீடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன .
ஆறு மாத சந்தை செயல்பாட்டின் அடிப்படையில் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் சேர்க்கவோ, நீக்கவோ படுகின்றன
இதேபோல் அசோக் லேலண்ட், பிஐ இண்டஸ்ட்ரீஸ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், ஐஆர்சிடிசி, யுபிஎல் மற்றும் ஏபிஎல் அப்பல்லோ டியூப் பங்குகள் வரும் டிசம்பர் 23-ம் தேதி முதல் BSE 100-ல் நீக்கப்பட்டு அவற்றிற்கு பதில் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், சுஸ்லான் எனர்ஜி, அதானி க்ரீன் எனர்ஜி, அதானி பவர், சம்வர்தனா மதர்சன் மற்றும் பிபி ஃபின்டெக் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
ஹெச்டிஎப்சி லைவ், பிபிசிஎல் மற்றும் எல்டிஐ மைண்ட்ட் ரீ ஆகியவை டிசம்பர் 23 முதல் BSE SENSEX 50 குறியீட்டிலிருந்து நீக்கப்பட்டு, ஜொமேட்டோ ஜியோ பைனான்சியல் ஹெச்ஏஎல் ஆகியவை சேர்க்கப்படவுள்ளன.
அதேபோல் மும்பை பங்குச்சந்தை நிர்வாகக்குழு தலைவராக சுபாசிஸ் சவுத்ரியை நியமிக்க செபி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நியமனம் கடந்த 21-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.