ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ. 6000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
‘புராஜெக்ட் ஸ்ட்ரெயிட்லைட்’ என்ற பெயரில் இந்தியாவில் ரூ. 6000 கோடியை ஒன்பிளஸ் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் உள்ள ஒன்பிளஸ் நிறுவனம், வணிகத்தை மேலும் வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கான சேவையை மேம்படுத்தவும் ஒன்பிளஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது..
பொருள்களின் தரம், வாடிக்கையாளர் சேவை மேம்பாடு, இந்திய சந்தைகளுக்கு ஏற்ப அம்சங்களை மேம்படுத்துவது ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரித்துள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய சந்தைகளில் தங்கள் வணிகத்தை வலுவாக்கவும், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும், ஒன்பிளஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2026-ம் ஆண்டுக்குள் தங்கள் சேவை மையங்களின் எண்ணிக்கையை 50% அதிகரிக்கவும், அதில் 22% இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே எட்டவும் ஒன்பிளஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது.