ஆப்பிரிக்காவில் மர்மக் காய்ச்சலுக்கு இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
காங்கோவில் காய்ச்சல் அறிகுறிகளுடன் கூடிய நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 20 நாட்களில் 300-க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மர்ம நோய் காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசப் பிரச்சினை மற்றும் இரத்த சோகை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறந்தவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், மர்ம காய்ச்சல் தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவவும், மக்கள் கூடுவதை தவிர்க்கவும், இறந்தவர்களின் உடல்களை தொடுவதை தவிர்க்கவும் மக்களை வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் குழு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.