2022 ஏலத்தில் 5ஜி ஸ்பெக்ட்ரமை வாங்கிய அதானியின் நிறுவனம் அதனை திருப்பி ஒப்படைக்கவுள்ளது.
2022 ஜூலையில் நடைபெற்ற 400 மெகா ஹெர்ட்ஸ் ஏலத்தில், அதானி டேட்டா நெட்வொர்க்குகள் 26 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமை ஏலத்திற்கு எடுத்தது. அப்போதுதான் முதன்முறையாக 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில் 26 ஜிகாஹெர்ட்ஸ் 5ஜி ஸ்பெக்ட்ரமை வாங்கிய அதானி எண்டர்பிரைசஸின் துணை நிறுவனமான அதானி டேட்டா நெட்வொர்க்குகள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதனை பயன்படுத்தாத நிலையில், அவற்றை திருப்பி ஒப்படைக்கவுள்ளது. எதற்காக அதனை திருப்பி ஒப்படைக்கவுள்ளது என்பதற்கான காரணம் தெரியவில்லை.
ஸ்பெக்ட்ரமை தனது சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தவுள்ளதாக அதானி நிறுவனம் கூறியிருந்தது. இது தொடர்பாக அதானி நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஸ்பெக்ட்ரமை ஏலத்தில் எடுத்த ஓராண்டுக்குள் சேவையை தொடங்கவேண்டும் என்பது ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்களுக்கான விதியாகும்.
அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் முதல் 13 வாரங்களுக்கு வாரத்திற்கு ரூ. 1 லட்சமும், அடுத்த 13 வாரங்களுக்கு வாரத்திற்கு ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அதானி நிறுவனத்திற்கு இந்த அபராதம் பெரிய தொகையாக இருக்காது என்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.