இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென வோக்ஹார்ட் நிறுவனர் ஹபில் கோராகிவாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
வோக்ஹார்ட் என்பது மும்பையை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமாகும். பயோடெக்னாலஜி துறையின் ஒரு பிரிவான பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலின் ஆதரவுடன் “நஃபித்ரோமைசின்” என்ற ஆன்டிபயாடிக் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து வோக்ஹார்ட் நிறுவனத்தால் “மிக்னாஃப்” என்ற வர்த்தக பெயரில் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதன் அறிமுக விழாவில் பேசிய வோக்ஹார்ட் நிறுவனர் ஹபில் கோராகிவாலா, சில மருந்துகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகும், சில மருந்துகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். நோயாளிகளுக்கு மருந்துகள் மலிவு விலையில் விற்பதை உறுதி செய்ய இந்தியாவில் கண்டிபிடிக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், தான் அவருடைய நிலையில் இருந்திருந்தால் இதே கோரிக்கை விடுத்திருப்பேன் என்று கூறினார்.