மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பங்குச்சந்தைக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை மற்றும் கமாடிட்டி வர்த்தகம் நடைபெறாது. இருப்பினும், கமாடிட்டியில் மாலை 5 மணி முதல் இரவு 11:55 மணி வரை (குறிப்பிட்ட சில அக்ரி கமாடிட்டி சந்தை இரவு 09:00 மணி வரை இயங்கும்) வர்த்தகம் மீண்டும் தொடங்கும்.
கடந்த 7 நாட்களாக வீழ்ச்சி அடைந்து வந்த பங்குச்சந்தை, இன்றைய வர்த்தக நேர முடிவில் சிறிது ஏற்றத்தோடு முடிவடைந்தது. இதனால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். நவம்பர் மாதத்தில் 3-வது நாளாக வர்த்தக நாளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளி, குருநானக் ஜெயந்தியை ஒட்டி, இரு தினங்கள் பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தீபாவளியன்று சிறப்பு நேரமாக ஒரு மணி நேரம் மட்டும் பங்குச்சந்தை இயங்கியது.
இதன் பிறகு டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படும். இது 2024ம் ஆண்டின் இறுதி விடுமுறை நாள் ஆகும்.