தென் கொரியாவில் கட்டாய ராணுவ சேவையை தவிர்க்க வேண்டுமென்றே உடல் எடையை அதிகரித்த இளைஞருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
தென் கொரியாவில் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கும் உடல் தகுதியுள்ள ஆண்கள் குறைந்தது 18 மாதங்கள் கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டுமென சட்டம் உள்ளது. ராணுவ சேவையில் விருப்பமில்லாத 26 வயது இளைஞர் ஒருவர், உடல் தகுதியில் தோல்வியுறுவதற்காக திட்டமிட்டு அதிக உணவு உட்கொண்டுள்ளார்.
இயல்பய் விட அதிகம் உண்டு 102 கிலோ வரை தனது உடல் எடையை மூன்றே மாதங்களில் அவர் அதிகரித்துள்ளார். இந்த குற்றத்திற்காக அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவருக்கு 3 ஆண்டுகள் வரை
தண்டனை வழங்கலாம் என்ற நிலையில், ராணுவத்திற்கு உண்மையாகச் சேவை செய்வதாக உறுதியளித்ததால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. போர் அல்லாத சேவையில் அவர் பணியாற்ற நீதிமன்றம் அனுமதியளித்தது.
மேலும், அந்த இளைஞர் தினமும் இரண்டு மடங்கு உணவை உட்கொள்ள உதவிய அவரது நண்பருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தான் விளையாட்டாக சொன்னதை அவர் நிஜமாகவே செய்வார் என்று நினைக்கவில்லை என்று பிற நண்பர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.