செயற்கைக்கோள் தகவல் தொடர்பு உரிமங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை தளர்த்துவது குறித்தும், அதன் கட்டமைப்பை சர்வதேச தரத்துடன் சீரமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க், ஜெஃப் பெசோஸின் அமேசான் கைபர் போன்ற சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க முடியும்.
தற்போது, குளோபல் மொபைல் பர்சனல் கம்யூனிகேஷன் பை சேட்டிலைட் என்ற அமைப்பின் கீழ் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு உரிமங்களுக்கு நிறுவனங்கள் விண்ணப்பித்து வருகின்றன. வாறு விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு 30-40 கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இந்த
விதிகளில் எவற்றிற்கு தளர்வு அளிக்கப்படுமென தெரியவில்லை. அது குறித்த விவாதங்கள் நடைபெற்றுவ வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டார்லிங்க் மற்றும் அமேசான் கைபர் ஆகிய இரண்டு நிறுவங்களின் விண்ணப்பங்களும் இந்தியாவில் நிலுவையில் உள்ளன. செயற்கைக்கோள் தகவல்தொடர்பு சேவைகளின் எல்லையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க இந்திய அரசாங்கத்தை ஸ்டார்லிங்க் வலியுறுத்து வருகிறது.