ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவிப்பின் படி, 25 ஜூன் 2025 அன்று உலகம் முழுவதும் உலக மூழ்குதல் தடுப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. தண்ணீரில் தவறுதலாக ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கத்தில், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சிறுவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்த லிட்டோரல் அகாடமி, ஒரு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிகழ்வை முன்னிட்டு, இன்று காலை லிட்டோரல் அகாடமியின் தலைவர் திரு. ராஜா வாஸ், தமிழ்நாடு இந்து அறநிலைய மற்றும் தொண்டு நிறுவனத் துறை மானியாளர் மாண்புமிகு திரு. பி. கே. சேகர் பாபு அவர்களை நேரில் சந்தித்து, இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக பங்கேற்கும் வகையில் அழைப்பு வழங்கினார்.
தண்ணீர் பாதுகாப்பு, மீட்பு நுட்பங்கள் மற்றும் தற்காப்புத் திறன்கள் ஆகியவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த நிகழ்வின் மூலம், மூழ்குதல் என்பது முன்கூட்டியே தடுப்பதற்கு வழியுள்ளவை என்னும் உண்மையை வலியுறுத்துகிறது. விழிப்புணர்வின் மூலம் உயிரைக் காக்கும் வழிகளைப் பரப்பி, அனைவருக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் லிட்டோரல் அகாடமி முன்னிலை வகிக்கிறது.
ஜூலை 25, 2025 அன்று சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வில் மரிடைம் மாணவர்கள், கடற்கரை சமூக ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் நிர்வாக அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு Indus Seafarers Training Academy, supportive partner -ராக உள்ளது.
பிரியதர்ஷினி. ஆ