ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை மீண்டும் வெடித்து சிதறியுள்ளது. இது இந்த ஆண்டில் 7-வது முறையாகும்.
இதனை தொடர்ந்து ஐஸ்லாந்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான புளூ லகூனில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அவசர நிலை அறிவிக்கப்பட்டு பொதுமக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த எரிமலை வெடிப்பால் விமான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.
இந்த ஆண்டில் 7-வது முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளதால் உட்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எந்நேரமும் எரிமலை மீண்டும் வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த எரிமலை வெடிப்பினால் சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு பிளவு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும். இது கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட பிளவை விட குறைவு என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.