மத்திய பொதுத்துறை நிறுவனங்கள்(CPSE ) மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை இணைக்கும் வகையிலான கண்காட்சியை மத்திய எம்எஸ்எம்இ அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை கிண்டியிலுள்ள எம்எஸ்எம்இ வளர்ச்சி மற்றும் வசதி அலுவலகத்தில், 2024 டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இந்த கண்காட்சி (CPSE & MSME Connect-2024) நடைபெறவுள்ளது.
இந்திய அரசு “பொது கொள்முதல் கொள்கை 2012” (PPP) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
அரசு துறைகள். & பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் ஆண்டுத் தேவைகளில் 25% பொருட்கள் மற்றும் சேவைகளை சிறு, குறு நிறுவனங்களிடமிருந்து கட்டாயமாக வாங்க வேண்டும் என்பதே இதன் முக்கிய அம்சம் ஆகும்.
இந்த 25% வருடாந்திர கொள்முதலில் 4% தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தோரின் நிறுவனங்களிடமிருந்தும், 3% பெண்கள் நடத்தும் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த இரண்டு நாள் நிகழ்வில், குறு மற்றும் சிறு நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவங்களுக்கு தேவையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் காட்சிப்படுத்த வாய்ப்பளிக்கும்.
NLCIL, SAIL, IOCL, CPCL, Railways, ICF, BHEL, IGCAR, BPCL, Defense Establishments, CVRDE, HAL, BEL, GAIL, ISRO, KVIC NSIC, வங்கிகள் போன்றவை கண்காட்சியில் தங்கள் அரங்குகளை அமைக்கவுள்ளது. கண்காட்சியை பார்வையிட அனைவருக்கும் அனுமதி இலவசம்.