Author: Porulaathaaram Post

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஐபிஓ பங்குச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், முதலீட்டாளர்களிடையே மந்தமான வரவேற்பையே பெற்றுள்ளன. மாருதி சுஸுகிக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் பங்குகள் 7 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவை சந்தித்ததால், முதலீட்டாளர்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். தேசியப் பங்குச் சந்தை என்எஸ்இ-யில் அதன் வெளியீட்டு விலையான ரூ.1,960-ல் இருந்து 1.3 சதவீதம் குறைந்து ரூ.1,934-ல் தொடங்கிய பங்கு வர்த்தகம் ரூ.1,819.60-ல் முடிவடைந்தது. ரூ.1.59 லட்சம் கோடிக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் மதிப்பு தற்போது ரூ.1.47 லட்சம் கோடியாக உள்ளது. சந்தையின் நிலை சற்று ஏற்ற இறக்கத்துடன் உள்ளதாலும், ஒட்டு மொத்த துறையும் சுழற்சியான மந்தநிலையை சந்தித்துள்ளதாலும், இது பங்குகளின் மீது குறுகிய கால பாதிப்பை ஏற்படுத்துமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஹூண்டாய் இந்தியா பங்குகள் இதிலிருந்து மீண்டு வரும் எனவும், ஒரு நீண்ட கால முதலீட்டாளருக்கு,…

Read More