இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 56.74 புள்ளிகள் குறைந்து 81,709.12 புள்ளிகளாகவும், நிஃப்டி 35.85 புள்ளிகள் குறைந்து 24,672.55 புள்ளிகளாகவும் நிலைபெற்றது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் மாற்றமின்றி தொடரும் என அறிவித்த நிலையில், சென்செக்ஸ், நிஃப்டி சரிவை சந்தித்தது.
துறை வாரியாக, ஐடி மற்றும் ஊடகம் தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் உயர்ந்து முடிவடைந்தன. நிஃப்டியில் டாடா மோட்டார்ஸ் 3.21 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 2.34 சதவீதமும், ஆக்சிஸ் வங்கி 1.50 சதவீதமும், பிபிசிஎல் 1.28 சதவீதமும், டாக்டர் ரெட்டிஸ் லேப் 1.10 சதவீதமும் உயர்ந்தன. மாறாக, அதானி போர்ட்ஸ் (-1.51 சதவீதம்), சிப்லா (-1.42 சதவீதம்), பார்தி ஏர்டெல் (-1.09 சதவீதம்), ஹெச்டிஎஃப்சி லைஃப் (-1.08 சதவீதம்), மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி (-0.99 சதவீதம்) ஆகியவை சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச்சந்தையில் 4,088 பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டன. இதில் 2,399 பங்குகள் ஏற்றம் கண்டன். 1,590 பங்குகள் சரிவை கண்டன. 99 பங்குகள் மாற்றமின்றி உள்ளன. கூடுதலாக, 233 பங்குகள் 52 வார உச்சத்தைத் தொட்டன, அதே நேரத்தில் 13 பங்குகள் 52 வாரக் குறைந்தபட்சத்தைத் தொட்டன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று சுமார் 0.05% அதிகரித்து ரூ.84.68 ஆக நிறைவு பெற்றது.