நபார்டு நிறுவத்தின் 44-வது ஆண்டு விழா சென்னையில் விமரிசையாகக் நடைபெற்றது. இந்நிகழ்வில் நபார்டு தலைவர் திரு ஷாஜி கே.வி., தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு என். முருகானந்தம், மற்றும் உயரதிகாரியான திரு எம். நாகராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் கிராமப்புற வளர்ச்சி, புதுமை சார்ந்த திட்டங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் தொழில்நுட்ப பங்களிப்பு குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது.
நிகழ்வின் போது, லடாக்கில் துணை அலுவலகம் நிறுவல், கிராமப்புற நவீன முயற்சிகளுக்கான வாட்ஸ்அப் சேனல், நிதி விழிப்புணர்விற்கான ரேடியோ ஜிங்கிள், GRIP (Gramin Rupayee Income Plan) எனப்படும் கிராமப்புற வருவாய் மேம்பாட்டு திட்டம், கூட்டுறவு வங்கிகளுக்கான நிவாரண ஆலோசனை மையம் உள்ளிட்ட பல்வேறு புதிய பணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், காலநிலை நிலைத்தன்மையை முன்னெடுத்தும், பசுமை சார்ந்த முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் “Green Roots” ஆவணப்படமும் வெளியிடப்பட்டது. 1982 ஜூன் 12ஆம் தேதி மும்பையில் நிறுவப்பட்ட நபார்டு, இந்தியாவின் பிரதான ஊரக வளர்ச்சி வங்கியாக, நாட்டு வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
பிரியதர்ஷினி .ஆ