விண்வெளித் துறையில் இத்தாலியின் சாதனைகளைக்கொண்டாடும் வகையில், மும்பையில் கடல் மற்றும் விண்வெளி பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு கடந்த 29-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.
புதிய விண்வெளி திட்டங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பது மற்றும் இரு தரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இந்த மாநாட்டில் முக்கிய விவாதங்கள் நடைபெற்றன. இரு நாடுகளை சேர்ந்த முக்கிய நிறுவனங்கள் இதில் பங்கேற்றதோடு, இத்தாலி அமைச்சர் அடோல்போ உர்சோ பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர், தென்கிழக்கு ஆசியாவில் செயல்பட விரும்பும் இத்தாலிய நிறுவனங்களுக்கு இந்தியா அடிப்படையாக இருக்க முடியும் என்று கூறினார்.கடல் கடல் மற்றும் விண்வெளி பொருளாதாரத்தில் இரு நாடுகளும் கொண்டுள்ள தொழில்நுட்ப அறிவை அவர் எடுத்துரைத்தார். காலநிலை மாற்றம், விண்வெளி ஆய்வு, கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.