இன்றைய வர்த்தநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 759.05 புள்ளிகள் உயர்ந்து 79,802.79 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 216.95 புள்ளிகள் உயர்ந்து 24,131.10 புள்ளிகளாக நிலைபெற்றது. முன்னதாக, சென்செக்ஸ் நேற்று 1,190.34 புள்ளிகள் சரிந்து 79,043.74 புள்ளிகளிலும், நிஃப்டி 360.75 புள்ளிகள் சரிந்து 23,914.15 புள்ளிகளிலும் முடிவடைந்தது. இரு குறியீடுகளும் ஒரு சதவீதம் உயர்வு கண்டுள்ளன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டில் உள்ள முதல் 30 பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், அதானி போர்ட்ஸ், உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இன்ஃபோசிஸ் ஆகிய பங்குகள் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையைில் அதானி கிரீன் எனர்ஜி 21.72 %, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 15.56% உயர்ந்தது.
அதானி கிரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகிய பங்குகள் தேசிய பங்குச் சந்தையின் ஃப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் பிரிவில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று 23% வரை உயர்ந்தன. அதானி குழுமத்தின் பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்றத்தில் முடிவடைந்தன.
அதேபோல், பொதுத்துறை வங்கி குறியீடு 0.5% சரிந்து முடிவடைந்தது. ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா ஆகியவற்றின் பங்குகள் 0.2% உயர்ந்தன.