மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இது பங்குச்சந்தையில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியான பின்னரே பங்குச்சந்தை ஏற்றம் கண்ட நிலையில், தேர்தல் முடிவுகள் திங்கட்கிழமையன்று பங்குச்சந்தையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே, உட்கட்டமைப்பு மற்றும் வங்கிகள் பங்குகள் ஏற்றம் காணுமென நிபுணர்கள் கணித்துள்ளனர்.
முன்னதாக, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பார்மா உள்ளிட்ட பங்குகளை அதிக அளவில் வாங்கினர்.
மகாராஷ்டிராவில் வலுவான அரசு அமைந்துள்ளதால் பங்குச்சந்தை ஏற்றம் காணுமெனவும், வணிக சார்பு கொள்கைகள் அதிகமாக கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.