கென்யாவில் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என அதானி குழுமம் மறுத்துள்ளது.
அமெரிக்க நீதிமன்றம் தொழிலதிபர் அதானி அரசு அதிகாரிகளுக்கு பல ஆயிரம் கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் நிதிதிரட்டி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டியது.
அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றம் லஞ்சப்புகார் சுமத்தியதை தொடர்ந்து, அந்நிறுவனத்துடன் போடப்பட்ட 2.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை கென்ய அரசு ரத்து செய்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அதானி குழுமத்திற்கு செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அதானி குழுமம், கென்யாவில் 30 ஆண்டுகளுக்கு மின்சார பகிர்மானத்திற்கு அதானி குழுமம் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை எனவும், அது செபியின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக அதானி நிறுவனத்திற்கோ அல்லது அதன் துணை நிறுவனங்களுக்கோ கென்யாவின் விமான நிலையம் தொடர்பாக எந்த ஒரு திட்டமும் வழங்கப்படவில்லை என அதானி குழுமம் கூறியுள்ளது.