ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24ஆம் தேதி வருமான வரி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1860 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்முதலாக வருமான வரி சட்டம் அமலாக்கப்பட்டதனை நினைவுகூரும் நாளாக இது பார்க்கப்படுகிறது. இந்த தினம் நாட்டின் பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்தும் வரிவிதிப்பு முறைமையின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் நோக்கில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டும் வருமான வரித் துறை, தனது சேவைகள் மற்றும் நேர்மையான வரி செலுத்துதலுக்கான விழிப்புணர்வை அதிகரிக்க பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. கல்வி நிறுவனங்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரி செலுத்தும் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் வகையில் கருத்தரங்குகள், வினாடி-வினா போட்டிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. இந்த நாளின் மூலம் நம் நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொருவரும் பங்கெடுக்க வேண்டிய கடமை பற்றி நம்மை நினைவூட்டுகிறது.
பிரியதர்ஷினி .ஆ